மாற்றுத்திறனாளிகளுக்கு மனை வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு மனை வழங்க கோரிக்கை

Added : ஆக 31, 2021
Share
இளையான்குடி : இளையான்குடி மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இளையான்குடிபேரூராட்சிக்குட்பட்ட அரசு இடத்தில் மாற்று திறனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இளையான்குடி பேரூராட்சியில் வசிக்கும் தகுதியுள்ள ஏழை மாற்றுத்திறனாளிகள்

இளையான்குடி : இளையான்குடி மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இளையான்குடிபேரூராட்சிக்குட்பட்ட அரசு இடத்தில் மாற்று திறனாளிகளுக்கு வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இளையான்குடி பேரூராட்சியில் வசிக்கும் தகுதியுள்ள ஏழை மாற்றுத்திறனாளிகள் பலருக்கு வழங்காமல், தாலுகா பகுதியில் தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.பேரூராட்சி பகுதிகளில் வாழும் தகுதியுடைய மாற்றுதிறனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி இளையான்குடி பேரூராட்சி பகுதியில் வாழும் தகுதியுள்ள மாற்றுதிறனாளிகள் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X