பொது செய்தி

தமிழ்நாடு

நிரந்தர சோதனை சாவடி அமைக்க வலியுறுத்தல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திருப்புவனம் : நான்கு வழிச்சாலையில் நிரந்தர சோதனை சாவடி அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சிவகங்கை மாவட்ட எல்லை தொடங்கும் இடமான மணலுாரில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்துள்ளனர். மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, சாயல்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த இடத்தை கடந்து தான் செல்ல முடியும்.கொரோனா பரவலை தடுக்க

திருப்புவனம் : நான்கு வழிச்சாலையில் நிரந்தர சோதனை சாவடி அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட எல்லை தொடங்கும் இடமான மணலுாரில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்துள்ளனர். மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, சாயல்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த இடத்தை கடந்து தான் செல்ல முடியும்.கொரோனா பரவலை தடுக்க இந்த இடத்தில் தற்காலிக சோதனை சாவடி செயல்பட்டு வந்தது.

எந்தவித அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வந்த இந்த சோதனை சாவடி காற்று, மழை காரணமாக சேதமடைந்துள்ளது.மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் குருபூஜை, இம்மானுவேல் நினைவு தினம் உள்ளிட்ட அடுத்தடுத்து நினைவு நாள் வர உள்ள நிலையில் சேதமடைந்த சோதனை சாவடியில் பணிபுரியும் போலீசார் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பெண் போலீசார் நீண்ட நேரம் இங்கு பணிபுரியும் போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க மாவட்ட எல்லையான மணலுாரில் நிரந்தர கட்டட வசதியுடன் சோதனை சாவடி அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X