பொது செய்தி

தமிழ்நாடு

எங்கே இருக்கீங்க ஆபிஸர்... இதையும் பாருங்க ; ஆக்கிரமிப்பின் பிடியில் காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
காரியாபட்டி : காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்ட்,ஒன்றிய அலுவலகம் ரோடுகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சென்றதால் , இதில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தினமும் அல்லாடும் நிலை தொடர்கிறது.இங்குள்ள பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி ஒன்றிய அலுவலகம், உழவர் சந்தை, எம்.எல்.ஏ., அலுவலகம், பேரூராட்சி வணிக வளாகம், தோட்டக்கலைதுறை, விவசாய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அமைந்துள்ளன.

காரியாபட்டி : காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்ட்,ஒன்றிய அலுவலகம் ரோடுகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சென்றதால் , இதில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தினமும் அல்லாடும் நிலை தொடர்கிறது.

இங்குள்ள பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி ஒன்றிய அலுவலகம், உழவர் சந்தை, எம்.எல்.ஏ., அலுவலகம், பேரூராட்சி வணிக வளாகம், தோட்டக்கலைதுறை, விவசாய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அமைந்துள்ளன. முப்பத்தி ஆறு ஊராட்சிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் அலுவலகங்களுக்கு வருவது வழக்கம். எப்போதுமே இப் பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படும். தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, வெளியூர் செல்பவர்கள் என பல்வேறு காரணங்களுக்காக சுற்று கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காரியாபட்டி வந்து செல்கின்றனர்.

இவர்களின் வருகையை எதிர்நோக்கி ரோட்டோர நடைபாதையில் நடமாடும் கடைகள் அதிகம் முளைத்தன. குறிப்பாக காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி ஏராளமான கடைகள் முளைத்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.இதில் ஒன்றிய அலுவலக ரோட்டில் ஏராளமான நடமாடும் கடைகளை ஆக்கிரமித்துள்ளனர். பொருட்கள் வாங்க வருபவர்கள் டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். அலுவல் நாட்களில் ஒவ்வொரு நாளும் இந்த ரோட்டை கடக்க அதிகாரிகள் படாதபாடு படுகின்றனர். ஆத்திர அவசரத்திற்கு அவ் வழியில் அதிகாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் எம்.பி., நிதியில் ரூ. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட நிழற் குடை பயன்பாடின்றி கிடக்கிறது. இதை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், மதுரையில் இருந்து வரும் பஸ்களை நிழற்குடை அருகே நிறுத்த திட்டமிடப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பதால் பஸ்களை நிறுத்தும் திட்டம் கைவிடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எப்போதும் வாகன நெருக்கடி ஏற்பட்டு இரு வாகனங்கள் விலகி செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X