பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் 'அவுட்'... அரசு கட்டடங்கள் 'அம்போ'; கவலையில் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : பயன்படாத அரசு கட்டடங்கள், அடிப்படை வசதிகள் இல்லாது அவலம் என , அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் படாதபாடுபடுகின்றனர்.அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியில் லட்சுமி நகர், பூபால் நகர், விஜயநகரம், காந்தி நகர் உட்பட 10 க்கு மேற்பட்ட புற நகர் பகுதிகள் உள்ளன. ஊரிலும் சரி, புற நகர்பகுதிகளிலும் சரி பல ஆண்டுகளாக போதுமான அடிப்படை

அருப்புக்கோட்டை : பயன்படாத அரசு கட்டடங்கள், அடிப்படை வசதிகள் இல்லாது அவலம் என , அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் படாதபாடுபடுகின்றனர்.

அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியில் லட்சுமி நகர், பூபால் நகர், விஜயநகரம், காந்தி நகர் உட்பட 10 க்கு மேற்பட்ட புற நகர் பகுதிகள் உள்ளன. ஊரிலும் சரி, புற நகர்பகுதிகளிலும் சரி பல ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஊராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நுாலக கட்டடம், இ-சேவை மையம், நவீன சுகாதார வளாகம் என புதுபுது கட்டடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளன.

கட்டடங்கள் சேதமடைந்து அரசு நிதியும் வீணாகிறது. அடிப்படை வசதிகளான சாக்கடை, ரோடு, தெருவிளக்கு என எதுவும் பல பகுதிகளில் இல்லை என்பது மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.மழை காலங்களில் தெருக்களில் நடக்க முடியாத அளவிற்கு சகதியாக உள்ளது. சாக்கடைகள் சேதமடைந்துள்ளது. லட்சுமி நகரிலோ எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்கின்றனர் இங்குள்ளோர். மயானத்திலும் எந்தவித வசதிகளும் இல்லை. இறுதி சடங்கு செய்ய முடியாது திணறுகின்றனர்.

ஊரில் பல பகுதிகளில் குப்பையை கொட்டி எரிப்பதால் சுவாச கோளாறு ஏற்படுகிறது. ஊரில் பன்றிகள் தொல்லை அதிகமாகி தெருக்களில் சுதந்திரமாக சுற்றி திரிகிறது. சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது . இங்குள்ள தும்பைகுளம் கண்மாய் ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது பராமரிப்பின்றி கழிவு தேங்கும் குளமாகமாறி விட்டது.

பன்றிகள் தொல்லை

ராமமூர்த்தி, உரிமையாளர், ஸ்பேர் பார்ட்ஸ் கடை, காந்தி நகர்: குப்பை கொட்ட கூட குப்பை தொட்டிகள் இல்லை. சாக்கடை, போதுமான தெருவிளக்குகள் இல்லை. பெரும்பாலான தெருக்கள் இருளில் உள்ளது. குப்பையை ரோடு அருகேகொட்டி எரிப்பதால், சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. ஓட்டல் குப்பையை சாப்பிட பன்றிகள் வருவதால் ரோட்டை கிராஸ் செய்யும் போது விபத்து ஏற்படுகிறது.

ரோடு, சாக்கடை வசதி இல்லை

சிவக்குமார், வாகன டிரைவர், விஜயநகரம்: விஜயநகரம் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இங்கு முறையான ரோடு ,சாக்கடை வசதி இல்லை. பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி கண்டு கொள்ளவில்லை. எங்கள் பகுதிக்கு பூங்கா வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

நாகஜோதி, ஊராட்சி தலைவர்: ஊரில் பன்றிகளை விரட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நினைவு கடிதம் வழங்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகள் அதிகமாக இருப்பதால் முழுமையான பணிகளை செய்ய முடியவில்லை.

ஊராட்சிக்குதான் அதிக அதிகாரம்

சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்: ஊராட்சி தலைவர்களுக்கு தான் அரசு அதிகமான அதிகாரம் கொடுத்துள்ளது. அரசு நிதியும் நேரடியாக ஊராட்சிக்கு வருகிறது. ஊராட்சி தலைவராக அடுத்த முறையும் தொடர வேண்டும் என்றால், மக்களை தினமும் பார்த்து வேண்டிய வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க வேண்டும். முழு அதிகாரம் இருந்தும் ஊராட்சி தலைவர் பணிகளைசெய்ய பயப்படுகிறார்.முழு அளவில் வளர்ச்சி பணிகள்சசிகலா பொன்ராஜ், ஒன்றிய தலைவர், அருப்புக்கோட்டை: ஒவ்வொரு ஊராட்சிக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் முழுமையான அளவில் நிதி வர உள்ளது. அதனால் அனைத்து ஊராட்சிகளிலும் முழுவீச்சில் பணிகள் நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X