போலீஸ் செய்திகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பூட்டை உடைத்து திருட்டுதளவாய்புரம்: தேசிகாபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி மாரிமுத்து .மனைவி மகாலட்சுமி கூலி தொழிலாளி. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மோதிரம், கம்மல் உட்பட 2 பவுன் தங்க நகை,ரூ. 12 ஆயிரம் திருடு போயிருந்தது.வீட்டில் வைத்திருந்த ரேஷன் கார்டு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் மாயமானது

பூட்டை உடைத்து திருட்டு

தளவாய்புரம்: தேசிகாபுரத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி மாரிமுத்து .மனைவி மகாலட்சுமி கூலி தொழிலாளி. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மோதிரம், கம்மல் உட்பட 2 பவுன் தங்க நகை,ரூ. 12 ஆயிரம் திருடு போயிருந்தது.வீட்டில் வைத்திருந்த ரேஷன் கார்டு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் மாயமானது தெரிந்தது. தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போக்சோவில் வாலிபர் கைது

விருதுநகர்: பாண்டியன் நகர் ஜக்கதேவி நகரை சேர்ந்தவர் முத்தீஸ்வரி 38. கணவர் அமல்ராஜ் லோடுமேன். இவர்களது 17 வயது மகளை அதே பகுதி தங்கமுனீஸ்வரன் 19, காதலித்து 2 மாத கர்பமாக்கினார். அனைத்து மகளிர் போலீசார் தங்கமுனீஸ்வரனை கைது செய்தனர்.

பீடி தர மறுத்தவருக்கு அடி

சிவகாசி: திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 62. பழைய இரும்பு கடை நடத்தி வரும் இவர், இரவில் கடையில் தங்கியிருந்தார். அவரிடம் திருத்தங்கல் மேற்கு ரத வீதியை சேர்ந்த மாரிமுத்து 22, மாரீஸ்வரன் 18, பீடி கேட்டனர். தர மறுத்த நிலையில் அங்கிருந்த நாய்கள் இருவரையும் விரட்டியுள்ளது. ஆத்திரமடைந்த இருவரும் ராஜேந்திரனை தாக்கினர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X