தமிழ்நாடு

தெருக்களை சீரமைக்க முடியாத ஊராட்சி தலைவர்கள் திணறல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கிராவல் மண் கொண்டு பாதையை சரி செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதால், மழையால் சகதியாகி மக்கள் தவிக்கும் நிலையில், தெருக்களை சீரமைக்க முடியாது ஊராட்சி தலைவர்களும் திணறுகின்றனர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி கன,மிதமான மழை பெய்து வருகிறது. கிராமப்புறங்களில் நகர் பகுதி போல் தரமான தார் ,பேவர்பிளக்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கிராவல் மண் கொண்டு பாதையை சரி செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதால், மழையால் சகதியாகி மக்கள் தவிக்கும் நிலையில், தெருக்களை சீரமைக்க முடியாது ஊராட்சி தலைவர்களும் திணறுகின்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி கன,மிதமான மழை பெய்து வருகிறது. கிராமப்புறங்களில் நகர் பகுதி போல் தரமான தார் ,பேவர்பிளக் ரோடுகள் இல்லை. பெரும்பாலான ஊராட்சி புதிய நகர் பகுதி தெருக்கள் ரோடு வசதியின்றி மண் ரோடாக உள்ளது. கிராம காலனி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் ரோடு தற்போது சிமென்ட் கரைந்து அதுவும் மண்ரோடாக மாறிவிட்டது.

இதன் காரணமாக கிராம மக்கள் தங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மழை பெய்தால் கூட ,இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பல கிராமங்களில் புதிதாக உருவாகிய குடியிருப்பு பகுதிகளில் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் வசிப்பவர்கள் மழைக்காலத்தில் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

பல கிராமங்களில் கிராவல் மண் அடித்து தெருக்களை சீரைமக்க ஊராட்சி தலைவரை நாடுகின்றனர். அவர்களோ , கிராவல் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி சீட்டு வழங்குவதில்லை. இதனால் எங்களால் முடியாது என கைவிரித்து விடுகின்றனர். பொதுமக்களோ தங்கள் பகுதிக்கு ரோடு வசதியின்றி, ஏன் தான் மழை பெய்கிறதோ என சலித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம்தான் சற்று கருணை காட்ட வேண்டும்.........

குறைகளை களையுங்க

கிராமங்களில் சாக்கடை கட்டினால் ரோடு போடுவதில்லை. ரோடு போட்டால் சாக்கடை கட்டுவதில்லை என்ற நிலை உள்ளது . கிராம தெருக்களில் சிறிய மழை பெய்தாலும் சாக்கடையும் மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதில் கால்வைத்து நடப்பதால் தொற்று நோய்கள் ஏற்படுகிறது . ஊராட்சி தலைவர்களிடம் கிராவல்மண் அடித்து ரோட்டை சரி செய்ய வேண்டும் என்றால், மாவட்ட நிர்வாகம் அனுமதி சீட்டு தரவேண்டும் என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் குறைகளை களைய வேண்டும்.மாரீஸ்வரன், டெய்லர்.சாத்துார்....................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X