பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோயில்கள், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு நாமத்வார் பிரார்த்தனை கூட்டத்தில் கிருஷ்ணருக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணரின் அவதார நிகழ்வான பாகவத பாராயணம் பஜனை பாடப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கோயில்கள், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு நாமத்வார் பிரார்த்தனை கூட்டத்தில் கிருஷ்ணருக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணரின் அவதார நிகழ்வான பாகவத பாராயணம் பஜனை பாடப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் செய்தார்.அருப்புக்கோட்டை நவநீத பாலகிருஷ்ணன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சமுக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். பஜனையும் நடந்தது.

ராஜபாளையம்: ஐ.என்.டி.யு.சி., நகர் ஹரே கிருஷ்ண ஹரே ராம பஜனை கமிட்டி சார்பில் நடந்த விழாவில் ராதை, கண்ணன் வேடமிட்டு பெண்கள் கோலாட்டம் ஆடினர். நாம சங்கீர்த்தனத்துடன் வழிபட்டனர். முடங்கியார் ரோடு யாதவர் சாவடியில் நடந்த விழாவில் அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார். நாமவழி பஜனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். சர்வ சமுத்திர அக்ரஹாரத்தில் உள்ள சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் கூட்டு வழிபாடு, நாம சங்கீர்த்தனம், கோலாட்டம் நடந்தது.

பெரிய சுரைக்காய் பட்டி நாயுடு தெருவில் வேணுகான பஜனாலயத்தில் குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு ஆடிப்பாடினர். ராஜபாளையம் என்.ஏ., ராமச்சந்திர ராஜா குருகுலத்தில் டிரஸ்டி கிருஷ்ணமூர்த்தி ராஜா, தாளாளர் மஞ்சுளா தலைமை வகித்தனர். கிருஷ்ண பஜனை நடந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் வழி ஓவிய போட்டி நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. கண்ணன், சத்தியபாமா, ருக்மணி அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை பரத்வாஜ் பட்டர் செய்தார். ஆண்டாள் கோயில் வளாகத்தில் லெட்சுமி நாராயணன் சன்னதி அருகே நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் கோகுலாஷ்டமி உற்ஸவம் நடந்தது. வேதபிரான் சுதர்சன் பட்டர் கிருஷ்ணபுராணம் வாசித்தார். இரவு 11:00 மணிக்கு மேல் கண்ணன் பிறப்பு வைபவம் நடந்தது. இதில் தவழும் கண்ணன் அலங்காரத்தில் சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர்.

சாத்துார்: கிருஷ்ணன் கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரதங்கள் அமைப்புகள் சார்பில் கிருஷ்ணன் சிலையுடன் பஜனை ஊர்வலம் சாத்துாரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடமிட்டு வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் சென்றபோது கொரோனாவை காட்டி போலீசார் தடுத்தி நிறுத்தினர். தடையை மீறி ஊர்வலம் சென்றனர். படந்தால் கண்ணன் கோயிலில் பஜனை நடந்தது.*இது மட்டுமன்றி வீடுகள் தோறும் கண்ணன் பாதம் கோலமிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகுப்படுத்தி சுற்றார், நண்பர்களுக்கு இனிப்புகள் பரிமாறி மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X