பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிந்து 3 மாதங்களாச்சு; இன்னும் வரலை தேர்தல் பணி படி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
விருதுநகர் : சட்டசபை தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தற்போது வரை தேர்தல் பணி படி வரவில்லை .2021 பிப். 26ல் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த நாள் முதல் மே 2 தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகன சோதனை, ரோந்து பணி, முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்தில் பாதுகாப்பு பணி, தேர்தல் நேரத்திலும்,

விருதுநகர் : சட்டசபை தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தற்போது வரை தேர்தல் பணி படி வரவில்லை .2021 பிப். 26ல் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த நாள் முதல் மே 2 தேர்தல் முடிவு அறிவிக்கும் வரை போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாகன சோதனை, ரோந்து பணி, முக்கிய பிரமுகர்களின் பிரசாரத்தில் பாதுகாப்பு பணி, தேர்தல் நேரத்திலும், ஓட்டு எண்ணிக்கை போதும் ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பணி போன்ற பணிகள் தேர்தல் பணிகளுக்குள் அடங்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களில் இருந்தும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இப்பணியில் ஈடுபடும்கான்ஸ்டபிளுக்கு ஒரு நாள் படியாக சிறப்பு ஊதியம் ரூ.150 , எஸ்.ஐ.,க்கு ரூ.300 வழங்கப்படுவது வழக்கம்.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் வழங்கப்படாததால் போலீசார் தவிக்கின்றனர். வேட்புமனு தாக்கலின் போது போலீசாருக்கு மதிய உணவு வழங்க வேண்டிய வருவாய்த்துறையினர் கல்தா கொடுத்தனர். அதே போல் ஊதிய படியும் கல்தா ஆகிவிடுமோ என போலீசார் மன உளைச்சலில் உள்ளனர்.

தேர்தல் முடிந்த பின் இரண்டாம் அலை ஊரடங்கிலும் தொடர்ந்து பணியாற்றி உள்ளனர். உடனே வழங்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன் வர வேண்டும்.எஸ்.பி., மனோகர்: தேர்தல் பணி சிறப்பு ஊதியம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X