பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் கொரோனா தடுப்பு பணி: அமைச்சரை ஏமாற்றிய அதிகாரிகள்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஓசூர்-ஓசூர் டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், கோவிட் கண்காணிப்பு பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.தமிழக அரசு கடந்த 23ம் தேதி முதல், மாநிலத்திற்கு இடையேயான பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. இதனால் ஓசூர், ஜூஜூவாடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் இருந்த, 'இ - பாஸ்' நடைமுறை மற்றும் கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள்

ஓசூர்-ஓசூர் டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், கோவிட் கண்காணிப்பு பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.



latest tamil news


தமிழக அரசு கடந்த 23ம் தேதி முதல், மாநிலத்திற்கு இடையேயான பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. இதனால் ஓசூர், ஜூஜூவாடி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் இருந்த, 'இ - பாஸ்' நடைமுறை மற்றும் கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் கைவிட்டனர்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட செயல்பாடுகளை பார்வையிட நேற்று ஓசூர் வந்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர், மாநில எல்லையில் கோவிட் கண்காணிப்பு பணி நடப்பது போல் அமைச்சரிடம் காட்ட விரும்பினர். இதற்காக மூன்று நாட்களாக, டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை தடுத்து, 'தெர்மல் ஸ்கேனர்' பரிசோதனை மற்றும் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இப்பணியை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று மதியம் பார்வையிட்டார்.

அதே நேரம், அதிகளவு வாகனங்கள் கடந்து செல்லும் ஜூஜூவாடி, கக்கனுார், பூனப்பள்ளி சோதனைச் சாவடிகளில், கொரோனா சோதனை பணி மேற்கொள்ளவில்லை. டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில் மட்டும், அமைச்சர் வருகைக்காக திட்டமிட்டு இப்பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளியில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்ட செயல்பாடுகளை, அமைச்சர் சுப்பிரமணியன், சூளகிரி அடுத்த பாத்தகோட்டாவில் நேற்று காலை ஆய்வு செய்தார்.


latest tamil news



ஓசூர் அரசு மருத்துவ மனையில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்த, காற்றிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்களை அமைச்சர் திறந்து வைத்தார். காவேரிப்பட்டணத்தில், தசை சிதைவு நோயால் பாதித்த பெண் குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து தேவை என்பதால், குழந்தையின் பெற்றோர், அரசு உதவி கேட்டு அமைச்சரிடம் மனு வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
31-ஆக-202109:14:51 IST Report Abuse
krish கேரள எல்லையில் பாதுக்காப்பு அதிகம் தேவை. அமைச்சர் ஆவண நடவடிக்கை எடுத்து தமிழகத்தை மூன்றாவது சீன தொற்றில் இருந்து காத்திடல் வேண்டும். தமிழக மேற்கு எல்லையில் துரித நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி அமைவோம்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஆக-202108:07:42 IST Report Abuse
duruvasar பாத்து தலைவா, ஆப்கன் எல்லைக்கு போயிடாதீங்க. அதேமாதிரி இங்கே இலங்கை எல்லையில் கால வச்சிடாதீங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஆக-202108:04:36 IST Report Abuse
duruvasar பாத்து தலைவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X