அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பிச்சம்பட்டி ஊராட்சி மக்கள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : வளர்ந்து வரும் ஆண்டி பட்டி ஒன்றியம் பிச்சம் பட்டி ஊராட்சியின் விரிவாக்கப் பகுதியில் அடிப்படை வசதி கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.இந்த ஊராட்சியில் பிச்சம்பட்டி, முல்லையம்பட்டி, பிச்சம்பட்டி காலனி, சமத்துவபுரம், சக்கம்பட்டி சுப்புகாலனி, அய்யனார்புரம் மற்றும் விரிவாக்கப்பகுதிகள் உள்ளன. பல ஆண்டுகளில் பல தெருக்களுடன் வளர்ந்துள்ள

ஆண்டிபட்டி : வளர்ந்து வரும் ஆண்டி பட்டி ஒன்றியம் பிச்சம் பட்டி ஊராட்சியின் விரிவாக்கப் பகுதியில் அடிப்படை வசதி கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.

இந்த ஊராட்சியில் பிச்சம்பட்டி, முல்லையம்பட்டி, பிச்சம்பட்டி காலனி, சமத்துவபுரம், சக்கம்பட்டி சுப்புகாலனி, அய்யனார்புரம் மற்றும் விரிவாக்கப்பகுதிகள் உள்ளன. பல ஆண்டுகளில் பல தெருக்களுடன் வளர்ந்துள்ள விரிவாக்கப்பகுதியில் தெருவிளக்கு, வடிகால், சிமென்ட் ரோடு இல்லை. பெருகும் குப்பை சவாலாக உள்ளது.

குறைவான துாய்மை பணியாளர்களால் அதிக தெருக்களில் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்த போதுமான நிதி ஆதாரம் இல்லை. இதனால் பல பகுதியில் மக்கள் குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:பஸ் இல்லைஎம்.ஜெயச்சந்திரன், சமத்துவபுரம்: சமத்துவபுரத்தில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதனை ஒட்டி வெங்கடாசலபுரம் உள்ளது. சமத்துவபுரத்திற்கு குடிநீர், வடிகால் வசதி இல்லை. 25 ஆண்டுகளை கடந்தும் இப்பகுதிக்கு பஸ் வசதி இல்லை.

மக்கள் ஒரு கி.மீ.துாரம் நடந்து சென்றுதான் பஸ் ஏற வேண்டி உள்ளது. திருமண மண்டபம், விளையாட்டு மைதானம், சமத்துவ குளம் பராமரிப்பின்றி உள்ளது. இருண்ட பகுதிகளை கடந்து வந்து செல்கிறோம். துாய்மை பணியாளர்கள் கூடுதல் நியமனம் செய்யவும், தெருவிளக்குகள் பராமரிக்கவும் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிரமம்

எஸ்.ராஜபாண்டியன், அய்யனார்புரம்: நுாறுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் உள்ள இங்கு தெருவிளக்கு, குடிநீர் வசதி இல்லை. போர்வெல் நீரைத்தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர். கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் இணைப்பு, பொதுக்கழிப்பறை இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் இப்பகுதிக்கு வாக்குறுதி அளிக்க பலரும் வந்து செல்கின்றனர். பின்னர் மறக்கின்றனர். விவசாயம் சார்ந்த இக்கிராமம் ஒதுக்குப்புறமாக அமைந்ததால் வெளி நபர்கள் குடியேறவில்லை. ஏற்கனவே இருந்த பலரும் இங்கிருந்து சென்றுவிட்டனர். இணைப்பு ரோடு கூட இல்லாத இங்கு மழைக்காலத்தில் சென்று வருவது மிக சிரமம். அடிப்படை வசதிகளை ஊராட்சி மேம்படுத்த வேண்டும்.

கடன் வாங்கி செலவு

பா.மகாலட்சுமி, ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் போதுமான நிதி ஆதாரம் இல்லை. மாநில நிதிக்குழு மானியத்தில் குடிநீர், சுகாதாரம், பணியாளர் சம்பளம் வழங்குதலைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. மோட்டார் பழுது உள்ளிட்ட அவசர செலவுகளுக்கு கடன் வாங்கி சரிசெய்யும் நிலைதான் உள்ளது. சமத்துவபுரத்தில் தேவையான வசதிகள் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி இருந்தால்தான் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடியும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் மக்கும், மக்காத குப்பை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் முடங்கி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X