வராக நதியின் குறுக்கே பாலம் இன்றி விவசாயிகள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வராக நதியின் குறுக்கே பாலம் இன்றி விவசாயிகள் தவிப்பு

Added : ஆக 31, 2021
Share
தேவதானப்பட்டி : நடுப்பட்டி வராகநதியில் பாலம் இன்றி விவசாயிகள் 5 கி.மீ., துாரம் விளை பொருட்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது.ஜெயமங்கலம், நடுப்பட்டியில் வராகநதியில் இருபுறங்களிலும் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, மா, கரும்பு விவசாயம் செய்கின்றனர். வராகநதியை கடந்து செல்ல பாலம் இல்லை.கடந்தாண்டு இரு விவசாயிகள் ஆற்றை கடந்து வரும் போது வெள்ளத்தில் சிக்கி

தேவதானப்பட்டி : நடுப்பட்டி வராகநதியில் பாலம் இன்றி விவசாயிகள் 5 கி.மீ., துாரம் விளை பொருட்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது.

ஜெயமங்கலம், நடுப்பட்டியில் வராகநதியில் இருபுறங்களிலும் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, மா, கரும்பு விவசாயம் செய்கின்றனர். வராகநதியை கடந்து செல்ல பாலம் இல்லை.கடந்தாண்டு இரு விவசாயிகள் ஆற்றை கடந்து வரும் போது வெள்ளத்தில் சிக்கி ஒருவர்பலியானார்.

விவசாயி கணேசன் கூறியதாவது: வராகநதியின்குறுக்கே பாலம் கட்டுவதற்கு பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். இலை கட்டுகளைதலையில் சுமந்து, ஆற்றில் கழுத்தளவு நீரில் வருகிறோம். சில நேரம் தலைச்சுமை ஆற்றில் விழுந்து நீரில் சென்று விடும். மழைகாலங்களில் சிரமம் அடைகிறோம்.விரைவில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டபொதுப்ணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X