தமிழ்நாடு

கரும்பில் புதிய ரகம் அறிமுகத்திற்கு விவசாயிகள்... எதிர்பார்ப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க புதிய ரகங்களை அறிமுகம் செய்திட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்து அதிகளவு கரும்பு பயிரிட்டனர். 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஏக்கரில் முன்னர் கரும்பு சாகுபடி ஆனது. சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து அறுவடை செய்த கரும்பை ஆலைக்கு ஏற்றி சென்று வாகனங்களுடன்

தேனி : தேனி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க புதிய ரகங்களை அறிமுகம் செய்திட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்து அதிகளவு கரும்பு பயிரிட்டனர். 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஏக்கரில் முன்னர் கரும்பு சாகுபடி ஆனது. சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து அறுவடை செய்த கரும்பை ஆலைக்கு ஏற்றி சென்று வாகனங்களுடன் காத்திருந்து வழங்கினர். விவசாயிகள் பலர் தோட்டங்களில் கரும்பு சாறு பிழிந்து காய்ச்சி வெல்லம் தயாரிப்பு, பாகுவை டின்களில் அடைந்து கேரளாவிற்கு அனுப்பினர்.நோய் பாதிப்பு அதிகம்கடந்த சில ஆண்டாக ஆய்வுகள் , புதிய ரகம் அறிமுகம் இன்றி மகசூல் பாதித்தது. கரும்பில் நுனிக் கருகல், வேர்புழு நோய் என 7 வகை நோய்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

கரும்பு ஏக்கருக்கு குறைந்தளவாக 30 முதல் 35 டன் கிடைக்கிறது. தற்போது குறைவாக 5 ஆயிரம் ஏக்கரில் மஞ்சுளா , 86032 போன்ற ரகங்கள் சாகுபடி ஆகியுள்ளது. இது சர்க்கரை ஆலையின் தேவைக்கு போதுமானது இல்லை. தற்போது டன் ரூ.2900 விலை கிடைக்கிறது. ஆனால் விவசாயிகள் சாகுபடியை அதிகரிக்க வழிகாட்டுதல்கள் இல்லை.

கசக்கும் கரும்பு

5 ஆண்டிற்கு ஒருமுறை கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் கரும்பு ஆய்வுகள் நடத்தி புதிய ரகங்களை வெளியிடுவார்கள். நோயை எதிர்த்து வறட்சியை தாங்கி வளர்ந்து அதிக மசூல் தரும் ரகங்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய ரகங்கள் பல ஆண்டுகளாக தேனியில் அறிமுகம் செய்யவில்லை.இதில் வேளாண் துறையும், சர்க்கரை ஆலையும் ஆர்வம் காட்டவில்லை.

ஒரு புறம் நோய் பாதிப்பு, மகசூல் குறைவு மறுபுறம் ஆலைக்கு வழங்கிய கரும்புக்கு பணம் பட்டுவாடா தாமதம் சூழலால் பலர் கரும்பு சாகுபடி கசக்கிறது என மாற்று சாகுபடிக்கு மாறி வருகின்றனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்டத்தில் கரும்பில் புதிய ரகம் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X