பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு நிலையம் சின்னமனுாரில் திறப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
சின்னமனுார் : சின்னமனுாரில் தீயணைப்பு நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.சின்னமனுாரை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள், மேகமலை பகுதிகள் உள்ளன. இங்கு தீ விபத்து உள்ளிட்டவை ஏற்பட்டால் உத்தமபாளையம் அல்லது தேனியிலிருந்து தான் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டும். அதற்குள் பாதிப்பு அதிகமாகும். இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு கடந்தாண்டே

சின்னமனுார் : சின்னமனுாரில் தீயணைப்பு நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சின்னமனுாரை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள், மேகமலை பகுதிகள் உள்ளன. இங்கு தீ விபத்து உள்ளிட்டவை ஏற்பட்டால் உத்தமபாளையம் அல்லது தேனியிலிருந்து தான் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டும். அதற்குள் பாதிப்பு அதிகமாகும். இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு கடந்தாண்டே அனுமதி வழங்கியது. ஆனால் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் இங்கு அரசு மருத்துவனை அருகில் வாடகை வீட்டில் தற்காலிகமாக நேற்று காலை தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது. மாவட்டத்தில் 9 வதாக இதனை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கலெக்டர் முரளீதரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் , அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் பிற நிலையங்களில் பணியாற்றும் வீரர்கள் தலா இரண்டு பேர் வீதம் இங்கு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விரைவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X