பொது செய்தி

தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.தேனி அல்லிநகரம் ஹைஸ் ஸ்கூல் தெரு அருகில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நகரத் தலைவர் அங்கையன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள், பூஜாரிகள் பேரவை

தேனி : தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

தேனி அல்லிநகரம் ஹைஸ் ஸ்கூல் தெரு அருகில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நகரத் தலைவர் அங்கையன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள், பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் இளங்கோவன், பஜ்ரங்தள் நகர இணை அமைப்பாளர் அய்யப்பன் , மக்கள் பங்கேற்றனர்.ஜெயந்தி பூஜை, கிருஷ்ணர் - ராதை சிலை அலங்கரிக்கப்பட்டு மலர் துாவி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியகுளம்: தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் சுதர்சனயாகம், கிருஷ்ணருக்கு மூலமந்திரம் ேஹாமம், லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம், சுவாமிக்கு 108 லிட்டர் பால், திருமஞ்னம், தயிர், வெண்ணெய் உட்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் கிருஷ்ணர் காட்சியளித்தார்.

கம்பம்: கம்பம் ஒக்கலிகர் கவுடர் சமூகத்துக்கு சொந்தமான நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவிற்கு சுருளி அருவியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. பட்டத்துக்கு காளைக்கு அபிஷேக,ஆராதனைகள் முடிந்த பின் ஸ்தம்பத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.

கூடலுார்: கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கண்ணன் தாலாட்டு பாடல்கள் பாடினர். சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டிபட்டி: விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வைகைரோடு சந்திப்பில் நடந்தது. மாவட்டச் செயலாளர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளார் பாலசுப்பிரமணி, நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கண்ணன் ராதை வேடமணிந்து விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேக்கிழார் பட்டி, திம்மரசநாயக்கனூர், அன்னை இந்திரா நகர், அனுப்பபட்டி ஆகிய கிராமங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X