கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
சென்னை,---'கடலோர மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்' என, கணிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று, சில இடங்களில் லேசான மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.வரும் 2, 3ம் தேதிகளில்,

சென்னை,---'கடலோர மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்' என, கணிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று, சில இடங்களில் லேசான மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.வரும் 2, 3ம் தேதிகளில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.


latest tamil news


மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்யும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் சின்ன கல்லார், வால்பாறை 4; குழித்துறை, அவலாஞ்சி 3; தேக்கடி, பந்தலுார் 2; சென்னை விமான நிலையம், பெரியாறு ராதாபுரம், தொழுதுார் 1 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X