பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகள் வாங்காததால் வீணாகிப்போன தக்காளி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கூடலுார், : வியாபாரிகள் வாங்காததால் கூடலுார் விவசாய நிலங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தக்காளி பழங்கள் வீணாகிப் போனது.கூடலுாரில் கழுதைமேடு, பெருமாள் கோயில், காஞ்சிமரத்துறை, பளியன்குடி பகுதியில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்கிலோ ரூ.20 வியாபாரிகள் விவசாய நிலத்திற்கே சென்று வாங்கினர். தற்போது விலை ரூ.6 முதல் 9 வரை என குறைந்ததால் வியாபாரிகள் வாங்க

கூடலுார், : வியாபாரிகள் வாங்காததால் கூடலுார் விவசாய நிலங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தக்காளி பழங்கள் வீணாகிப் போனது.

கூடலுாரில் கழுதைமேடு, பெருமாள் கோயில், காஞ்சிமரத்துறை, பளியன்குடி பகுதியில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்கிலோ ரூ.20 வியாபாரிகள் விவசாய நிலத்திற்கே சென்று வாங்கினர். தற்போது விலை ரூ.6 முதல் 9 வரை என குறைந்ததால் வியாபாரிகள் வாங்க மறுத்துள்ளனர். வியாபாரிகளை நம்பி செடியில் இருந்து பறித்த தக்காளி பழங்கள் அப்பகுதியிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாயி ஜெயபால் கூறும்போது, ''மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.20 என இருந்த போதிலும் வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் ரூ.6 முதல் ரூ. 9 வரை மட்டுமே கேட்கின்றனர். மேலும் பறித்த தக்காளியை வாங்க மறுக்கின்றனர். விலை குறைவால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை உள்ளது. அதனால் விவசாய நிலத்திலேயே பழங்களை விட்டு விட்டோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X