பொது செய்தி

தமிழ்நாடு

149 பள்ளிகள் திறக்க ஏற்பாடு; தூய்மைப்பணிகள் தீவிரம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் நாளை 149 உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது பரவல் குறைந்து சகஜநிலைக்கு மாறி வருகின்றன. இதனை தொடர்ந்து செப். 1ல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. தேனி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 149 திறக்க

தேனி : தேனி மாவட்டத்தில் நாளை 149 உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது பரவல் குறைந்து சகஜநிலைக்கு மாறி வருகின்றன. இதனை தொடர்ந்து செப். 1ல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. தேனி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 149 திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு நாட்களாக கல்வி மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்தி ,பள்ளிகள் திறப்பில் பின்பற்ற வேண்டிய ஆலோசனை வழங்கினார்.

இதன்படி மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் நுாறு சதவீதம் பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம். போதிய இட வசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 50 சதவீத அளவு மாணவர்களை வரவழைக்கலாம். 6,7,8 வகுப்புகள் செயல்படாததால் போதிய வகுப்பறைகள் உள்ளன. இடபிரச்னை ஏற்படாது. பள்ளிகளில் சானிடைசர், முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X