ஆக்கிரமிப்பில் சிக்கிய ஓடை| Dinamalar

ஆக்கிரமிப்பில் சிக்கிய ஓடை

Added : ஆக 31, 2021
Share
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான இடங்களில் கட்டடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லுாரியிலிருந்து கோம்பை வரை ரோட்டிற்கு தெற்கு பக்கம் உள்ள பெரிய ஓடை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கருக்கோடை பகுதியில் ஓடையை தேட வேண்டியுள்ளது. கனமழை பெய்யும் காலங்களில் இதில் வரும்

உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான இடங்களில் கட்டடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கல்லுாரியிலிருந்து கோம்பை வரை ரோட்டிற்கு தெற்கு பக்கம் உள்ள பெரிய ஓடை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கருக்கோடை பகுதியில் ஓடையை தேட வேண்டியுள்ளது. கனமழை பெய்யும் காலங்களில் இதில் வரும் வெள்ளநீரால் பாதிப்பு ஏற்படும். ரோட்டில் அரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஓடையை மீட்க ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X