விபத்து வழக்கு பதியாமல் போலீசார் பஞ்சாயத்து! மக்கள் அதிருப்தி| Dinamalar

தமிழ்நாடு

விபத்து வழக்கு பதியாமல் போலீசார் பஞ்சாயத்து! மக்கள் அதிருப்தி

Added : ஆக 31, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்து வழக்குகளை பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்சாலை விபத்துகள் நடந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட நபரோ, பாதிப்பை ஏற்படுத்திய நபரோ எவராயினும் நிவாரணம் பெற முடியும். காப்பீடு செய்திருந்தால் அதன் பலனை பெற முடியும்.ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்து வழக்குகளை பதிவு செய்யாமல் பஞ்சாயத்து பேசுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்

சாலை விபத்துகள் நடந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட நபரோ, பாதிப்பை ஏற்படுத்திய நபரோ எவராயினும் நிவாரணம் பெற முடியும். காப்பீடு செய்திருந்தால் அதன் பலனை பெற முடியும்.ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்குகளில் போலீசார் உடனே எப்.ஐ.ஆர்., பதிவதே இல்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகின்றனர்.

விபத்து எண்ணிக்கையை குறைத்து காட்டவே இதுபோன்று செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சாலை விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வழக்கு பதிவு செய்யாமல், பஞ்சாயத்து பேசி சரி செய்வது பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

இது குறித்து போலீசார் கேட்டால், முறையான பதில் சொல்லாமல் நழுவி விடுகின்றனர்.பாதிக்கப்படுவோர் இ.எஸ்.ஐ., முதல் வாகன காப்பீடு வரை எந்த பலனையும் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதிலும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அரசியல் புள்ளிகள், முக்கிய பிரமுகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் உடனே பதிவாகின்றன.

சாதாரண மக்களிடம் போலீசார் அலட்சியப் போக்கை கடைபிடிக்கின்றனர்.2020 ம் ஆண்டு மட்டும் 227 அபயகரமான சாலைவிபத்துக்கள் உட்பட 1479 ம் பதிவாகியுள்ளது. இதில் 257 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பதில் வழக்கே பதியாமல் குறைக்க பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X