பொது செய்தி

தமிழ்நாடு

கருணை ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'ஆவினில் பணியாளர்களின் கருணை ஓய்வூதியத்தை அரசாணைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு ஆவின் விரிவாக்க அலுவலர் மற்றும் மேலாளர்கள் நல சங்க கவுரவ தலைவர் ஜெயராஜ் தெரிவித்தது: 2016 ல் 110 விதியின் கீழ் ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை மற்றும் குடும்பநல கருணை ஓய்வூதியம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை 17 மாவட்ட ஆவின்

திண்டுக்கல் : 'ஆவினில் பணியாளர்களின் கருணை ஓய்வூதியத்தை அரசாணைப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு ஆவின் விரிவாக்க அலுவலர் மற்றும் மேலாளர்கள் நல சங்க கவுரவ தலைவர் ஜெயராஜ் தெரிவித்தது: 2016 ல் 110 விதியின் கீழ் ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை மற்றும் குடும்பநல கருணை ஓய்வூதியம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை 17 மாவட்ட ஆவின் ஒன்றியம் அதிகபட்சம் ரூ.3,500 வழங்கி நடைமுறைப்படுத்தியது.

அரசாணையில் கார்பஸ் நிதி மூலம் தனியாக நிதியகம் உருவாக்க வேண்டும். மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் வியாபாரம், வணிக வருவாயில் ஒரு சதவீதம் எடுத்து, அதனை கார்பஸ் நிதியில் வரவு வைக்க வேண்டும். அதன் மூலம் கருணை, குடும்பநல கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என விளக்கமாக கூறப்பட்டது.

இருப்பினும் 5 ஆண்டு களாக இதனை நடைமுறைப்படுத்தவில்லை. 2019 ல் ஓய்வூதியத்தை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட்டது. இதை சேர்த்தால் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தான் ரூ.4 ஆயிரம் கிடைக்கும். பத்து முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு குறைவான ஓய்வூதியமே கிடைக்கும். எனவே ஒரு சதவீதம் கார்பஸ் நிதி அத்தியாவசியமானது என்பதை ஆவன செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X