பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள்; விபரம் 'எமிஸ்'சில் பதிவேற்றம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விபரங்களை 'எமிஸ்'இணையதளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நாளை (செப்.1) முதல் 9 - 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலக

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விபரங்களை 'எமிஸ்'இணையதளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நாளை (செப்.1) முதல் 9 - 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி வாகன டிரைவர், பாதுகாவலர் உட்பட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களுக்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகளில் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விபரங்களை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களை மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X