தமிழ்நாடு

பஸ்சில் எச்சில் தொட்டு டிக்கெட் வேண்டாமே! வேண்டும் இ.டி.எம்., மெஷின்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:அரசு பஸ்களில், இ.டி.எம்., எனப்படும் மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு, மீண்டும் பழைய முறையில், அச்சிடப்பட்ட டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இவை முறைகேடுகளுக்கு வழிவகுப்பதோடு, நடத்துனர்களின் பணிச்சுமையும் அதிகரிக்கிறது என, புகார் எழுந்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டில், அரசு பஸ்களில், டிக்கெட் பிரிண்ட் செய்யும், எலக்டிரானிக் டிக்கெட்டிங்
பஸ்சில் எச்சில் தொட்டு டிக்கெட் வேண்டாமே! வேண்டும் இ.டி.எம்., மெஷின்

கோவை:அரசு பஸ்களில், இ.டி.எம்., எனப்படும் மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு, மீண்டும் பழைய முறையில், அச்சிடப்பட்ட டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இவை முறைகேடுகளுக்கு வழிவகுப்பதோடு, நடத்துனர்களின் பணிச்சுமையும் அதிகரிக்கிறது என, புகார் எழுந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில், அரசு பஸ்களில், டிக்கெட் பிரிண்ட் செய்யும், எலக்டிரானிக் டிக்கெட்டிங் மெஷின்(இ.டி.எம்.,) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், நடத்துனர்கள் வேகமாக, டிக்கெட் வழங்கினர். அவர்களின் பணிச்சுமையும் குறைந்தது.பயண வழித்தடம், நேரம், உள்ளிட்ட விவரங்களை மின்னணு இயந்திர டிக்கெட்டுகளால் அறிந்து கொள்ள முடிந்தது. பயணப்பட்டியல், டிக்கெட் விற்பனை தொடர்பான விவரங்களை, உரிய அதிகாரிகள் உடனடியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. இதனால், முறைகேடுகள் குறைந்தன.
சில நடத்துனர்கள், அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை எச்சில் தொட்டு கிழிக்கின்றனர். அது, தொற்று பரவ வழிவகுக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.நிலைமை இப்படியிருக்க, தற்போது டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள், நடத்துனர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பதிலாக, அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. இதனால், பணிச்சுமை அதிகரித்துள்ளதாக, நடத்துனர்கள் புலம்புகின்றனர்.
இது தொடர்பாக, நடத்துனர்கள் கூறியதாவது:மெஷின்கள் பழுதானால், சரி செய்து தருவதில்லை. ஏராளமான மெஷின்கள் தரமற்றவை என்பதால், பழுதாகிக் கிடக்கின்றன.சரி செய்து கொடுக்காமல், அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை தருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக, அவ்வளவாக மக்கள் கூட்ட நெரிசல் இல்லை.

இருந்தபோதும், விரைவாக டிக்கெட் தர முடிவதில்லை.மக்கள் நெரிசல் அதிகரித்தால் சிரமம்தான். மெஷின்களில் டிக்கெட் கொடுத்தால், முறைகேடு செய்ய வாய்ப்பு மிகக் குறைவு. அப்படி இருக்கையில், ஏன் மெஷின் தர மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.முறைகேடு தவிர்க்கவும், பயணிகளின் நலன் மற்றும் நடத்துனர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, மீண்டும் இ.டி.எம். கருவிகளை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X