பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று ஆண்டுகளாக இழுபறியில் தேர் 'ஷெட்'

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்களுக்கான 'ஷெட்' அமைக்கும் பணியில், 3 ஆண்டுகளாக இழுபறி நீடித்து வருகிறது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, 2 தேர்களை பாதுகாப்பாக நிறுத்த, 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய 'ஷெட்' அமைக்கும் பணி, 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. பணிகள், துவங்கி நடந்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டு நிறுத்தப்பட்டது.அதன்பின்,
 மூன்று ஆண்டுகளாக இழுபறியில் தேர் 'ஷெட்'

தொண்டாமுத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்களுக்கான 'ஷெட்' அமைக்கும் பணியில், 3 ஆண்டுகளாக இழுபறி நீடித்து வருகிறது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, 2 தேர்களை பாதுகாப்பாக நிறுத்த, 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய 'ஷெட்' அமைக்கும் பணி, 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. பணிகள், துவங்கி நடந்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டு நிறுத்தப்பட்டது.அதன்பின், மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. தற்போது, 18 மீ., உயரம், 12 மீ., அகலம், 24 மீ., நீளத்தில், இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில், தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.இந்த 'ஷெட்'டின் மேல்புறத்தில் மட்டும், தகரங்கள் வேயப்பட்டுள்ளன. மற்ற நான்கு புறங்களும், திறந்தவெளியாக உள்ளது. இதனால், காற்று, மழை உள்ளிட்ட காரணங்களால், தேர் பாதிப்படையும் நிலை உள்ளது. மூன்று ஆண்டுகளாக, இழுபறியில் உள்ள புதிய 'ஷெட்' அமைக்கும் பணி, எப்போது நிறைவடையும் என, பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.இதுகுறித்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் விமலா கூறுகையில்,"தேர் 'ஷெட்' உயரமாக உள்ளதால், பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் பணிகள் துவங்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X