காய்ச்சல் மாத்திரை இல்லாமல் அவதி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி சார்பில், மகப்பேறு மருத்துவமனைகளிலும், பல்வேறு இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சில இடங்களில், காய்ச்சல் மாத்திரை வழங்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கோவையில், கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்க, தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக, முதல் தவணை தடுப்பூசி போடுவோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். அதனால், மாத்திரை

கோவை:கோவை மாநகராட்சி சார்பில், மகப்பேறு மருத்துவமனைகளிலும், பல்வேறு இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சில இடங்களில், காய்ச்சல் மாத்திரை வழங்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கோவையில், கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்க, தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக, முதல் தவணை தடுப்பூசி போடுவோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். அதனால், மாத்திரை வழங்கப்படும். சமீபகாலமாக, அம்மாத்திரை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரம், மருந்து கடைகளிலும் காய்ச்சல் மாத்திரை வழங்க தடை விதித்திருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது தொடர்பாக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரிடம் கேட்ட போது, 'தடுப்பூசி முகாம்களில், முதல் டோஸ் செலுத்துவோருக்கு, காய்ச்சல் மாத்திரை வழங்குகிறோம். ஊசி போட கடைசியாக வந்தவர்களுக்கு, பற்றாக்குறை காரணமாக கிடைக்காமல் இருந்திருக்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X