'எஸ் பெண்டில்' திரும்பியவுடன் விபத்து!

Added : ஆக 31, 2021
Share
Advertisement
தண்ணீர் பந்தலில் வாகன ஓட்டிகள் கண்ணீர்மின் விபத்து அபாயம்மாநகராட்சி, 92வது வார்டுக்கு உட்பட்ட, பாலக்காடு ரோடு, நரசிம்மபுரம், மாங்கல்யா கார்டன் முதல் வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:11) கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டுள்ளன. மின் கம்பிகளை உரசியபடி உள்ள, இந்த ஒயர்களால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- பிந்து, மாங்கல்யா கார்டன்.பாதசாரிகள் அவதிகாந்திபுரம், நுாறடி

தண்ணீர் பந்தலில் வாகன ஓட்டிகள் கண்ணீர்

மின் விபத்து அபாயம்மாநகராட்சி, 92வது வார்டுக்கு உட்பட்ட, பாலக்காடு ரோடு, நரசிம்மபுரம், மாங்கல்யா கார்டன் முதல் வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்:11) கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டுள்ளன. மின் கம்பிகளை உரசியபடி உள்ள, இந்த ஒயர்களால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- பிந்து, மாங்கல்யா கார்டன்.

பாதசாரிகள் அவதிகாந்திபுரம், நுாறடி ரோட்டில், வர்த்தக கடைகளின் முன், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால், பாதசாரிகள் நடக்க வழியின்றி அவதிப்படுகின்றனர்.- சுரேஷ், சிவானந்தா காலனி.

ரேஸ்கோர்ஸில் நாய் தொல்லைரேஸ்கோர்ஸ் பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாக்கிங் செல்லும் நடைபாதையில் இவை சுற்றித்திரிவதுடன், வாக்கிங் செல்வோரை கடிக்கவும் வருகின்றன.- சண்முகம், கணபதி.

துாய்மை பணியில் அலட்சியம்தடாகம் ரோடு, இடையர்பாளையம், ஜே.ஜே.நகரில், மின் வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது, மரக்கிளைகளை அகற்றினர். அகற்றப்பட்ட மரக்கிளைகளை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முழுவதுமாக, அகற்றாமல் விட்டு விட்டனர். இக்கிளைகள், சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து, அடைப்பை ஏற்படுத்துகிறது.- ஐஸ்வர்யா, ஜே.ஜே.நகர்.

குழாய் உடைப்புகுடிநீர் வீண்கோவைப்புதுார் அடுத்த, சுண்டக்காமுத்துார் - பேரூர் ரோடு, சுண்டக்காமுத்துார் பஸ் ஸ்டாப் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகிறது.- மன்சூர், சுண்டக்காமுத்துார்.

சாலையில் ஓடுது சாக்கடை கழிவுமாநகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட, சின்னவேடம்பட்டி, ரமணி மயூரி குடியிருப்பு அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கார்த்திக், சின்னவேடம்பட்டி.

10. குழாய் உடைப்பு வீணாகுது தண்ணீர்வேடபட்டி, அஜ்ஜனுார் ரோடு, ஸ்ரீராம் கார்டன் பேஸ் - 2ல் குழாய்கள் உடைப்பால், குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- மனோகரன், ஸ்ரீராம் கார்டன்.

சாலை முழுவதும் ஜல்லி கற்கள்மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், அஷ்டலட்சுமி நகர் பகுதியில், சாலை செப்பனிடும் பணி, துவக்கப்பட்டு, ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும், பணி நிறைவடையாமல், பாதியில் நிற்கிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ஜெகதீஷ், இடையர்பாளையம்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்புரூக்பாண்ட் ரோடு, புரூக்பீல்ட்ஸ் எதிரில் உள்ள, பிரதான சாக்கடை கால்வாயில் குப்பை குவிந்து, அடைப்பட்டுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- கார்த்திக், ஆர்.எஸ்.புரம்.

சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி ரோடு, பீளமேடு, தண்ணீர் பந்தல், 'எஸ்' பென்ட்டில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது; வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- சாமி, தண்ணீர் பந்தல்.

மண் குவியலை அகற்றணும்சுக்கிரவார்பேட்டை, ரங்கே கவுடர் வீதி, பிரதான ரோட்டில், சாலை செப்பனிடும் பணி முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், சாலையோரம் குவிக்கப்பட்ட மண், அகற்றப்படாமல் உள்ளது. இதை அகற்றி, பாதசாரிகளின் சிரமத்தை போக்க வேண்டும்.- சந்திரசேகரன்,

ரங்கே கவுடர் வீதி.

சாக்கடை கால்வாய் அடைப்புபாப்பநாயக்கன்பாளையம், லட்சுமிமில்ஸ் அருகில், டி.பி.எப்.,வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது.- அருண்பிரசாத், பாப்பநாயக்கன்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X