பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுவேன்': இஸ்கானில் 'குட்டி கிருஷ்ணர்கள்' சபதம்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை;கோவை கொடிசியா கண்காட்சி அரங்கம் அருகே, இஸ்கான் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜெகன்நாதர் கோவில், குடியிருப்போர் நலச்சங்கங்கள், வி.எச்.பி., சார்பில், கிருஷ்ண ஜெயந்திவிழா, நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.அதிகாலை சுவாமிக்கு, ஸ்னான உற்சவம் நிறைவுக்குப்பின், ஸ்ரீஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவி ஆகியோருக்கு புத்தாடைகள், ஆபரணங்கள், மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு,
 'கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுவேன்': இஸ்கானில் 'குட்டி கிருஷ்ணர்கள்' சபதம்

கோவை;கோவை கொடிசியா கண்காட்சி அரங்கம் அருகே, இஸ்கான் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜெகன்நாதர் கோவில், குடியிருப்போர் நலச்சங்கங்கள், வி.எச்.பி., சார்பில், கிருஷ்ண ஜெயந்திவிழா, நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அதிகாலை சுவாமிக்கு, ஸ்னான உற்சவம் நிறைவுக்குப்பின், ஸ்ரீஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவி ஆகியோருக்கு புத்தாடைகள், ஆபரணங்கள், மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.சிறப்பு தீபாராதனை, கலசாபிஷேகம், நாமசங்கீர்த்தனம், பஜனை மற்றும் கோபூஜை விமரிசையாக நடந்தன.

பகவான் கிருஷ்ணர், நள்ளிரவில் பிறந்ததை முன்னிட்டு, இரவு பாலகோபாலருக்கு, புனித நதிகளின் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.கோவில் வளாகத்தில் உள்ள கோசாலையில், கோமாதாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகள், கொரோனா உருவத்தை மிதித்து துவம்சம் செய்து, 'கொரோனா நோய் தொற்றிலிருந்து இவ்வுலகை காப்பாற்றுவேன்' என்று சபதம் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சொற்பொழிவில், இஸ்கான் அமைப்பு மண்டல செயலாளர் பக்தி வினோத ஸ்வாமி மஹராஜ் நிகழ்த்திய சொற்பொழிவில், ''உலகம் முழுக்க பரவி பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனாவிலிருந்து, விரைவில் நாம் அனைவரும் விடுதலையாக வேண்டும். அதற்கு நாம் பகவத்கீதையில் இருக்கும், பகவான் கிருஷ்ணரின் உபதேசத்தை கடைபிடிக்க வேண்டும். 'ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா' என்று துவங்கும், மகாமந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, மனதில் நிலைநிறுத்த வேண்டும்,'' என்றார்.

இன்று ஜெகன்நாதர் கோவிலில் சுவாமிக்கு, 167 வகையான உணவு படைக்கப்படுகிறது. பக்தர் களுக்கும் சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது.வி.எச்.பி., சார்பில் கோலாகலம்!n விஷ்வஹிந்து பரிஷத்தின் துவக்க தினமான, ஸ்தாபன திவஸ் விழாவும், ஒன்பதாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்திவிழாவும், வடகோவை கிருஷ்ணசாமி முதலியார் சாலையிலுள்ள காமராஜர்புரத்தில் நடந்தது.விஷ்வஹிந்து பரிஷத் மாநகர் மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம், கொடியேற்றி துவக்கி வைத்தார்.

பகவான் கிருஷ்ணர் பிறப்பு குறித்த நாடகங்களும், கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

n ரத்தினபுரியிலுள்ள மேஸ்திரி மாறன் வீதி விநாயகர் கோவில், சுப்பாத்தாள் லேஅவுட் முத்துமாரியம்மன் கோவில், தயிர் இட்டேரி சக்திமாரியம்மன் கோவில், வி.சி.கே.நடராஜன் லே அவுட் தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய நான்கு இடங்களிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.

n விவேகானந்தர் பேரவை மற்றும் தமிழக இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரிய கடைவீதி கெரடி கோவில் வளாகத்தில், நடந்த விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சூலுார் வெற்றியம்மன் நகர் வெற்றி அம்மன் கோவிலில் நடந்த, கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X