பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தியால் வந்தது விசாகா கமிட்டி!

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் 'விசாகா' கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை நலக்குழு அமைப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்களில் பாலியல் தொல்லையால், பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுப்பதற்கு வசதியாக, விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.இத்தகைய கமிட்டி, கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக

கோவை:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் 'விசாகா' கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை நலக்குழு அமைப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்களில் பாலியல் தொல்லையால், பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுப்பதற்கு வசதியாக, விசாகா குழு அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.இத்தகைய கமிட்டி, கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லை. இதேபோல, குழந்தைகள் நல உரிமைக்கான குழுவும், அமைக்கப்படாமல் இருந்தது.இது பற்றி, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர்களுக்கான, உள் விசாரணைக்குழு (விசாகா) அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள, அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள், கண்ணியத்துடன் நடத்தப்படவும், அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடை செய்யவும், புகார் மனுவை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரிக்கவும், இந்த குழுவை அமைத்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தரப்படும் புகார்கள் குறித்து, குழு விசாரணை நடத்துவதற்கான விரிவான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.இதேபோல, குழந்தை நல உரிமைக்குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்துக்கு, விண்ணப்பங்களை வரவேற்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.கமிட்டியில் யார், யார்?விசாகா கமிட்டியின் தலைவராக, கலால் துணை ஆணையர் சுபா நந்தினி இருப்பார். செயல் உறுப்பினர்களாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் சட்டப்பணிகள் கீதா, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் பரமேஸ்வரி, ஆ பிரிவு தலைமை உதவியாளர் மோகனப்பிரியா, ஜீவசாந்தி நல அறக்கட்டளை செகனாஷ் பர்வீன், ஓ பிரிவு தலைமை உதவியாளர் குபேந்திரன் ஆகியோர் செயல்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X