பொது செய்தி

தமிழ்நாடு

என்.டி.சி., பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:தென் மண்டல என்.டி.சி., ஆலைகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த கூட்டத்தை, செப்., 21ல், கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எச்.எம்.எஸ்., ஏ.டி.பி., என எட்டு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, என்.டி.சி., பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம், காட்டூர் ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஐ.என்.டி.யூ.சி., தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில்,

கோவை:தென் மண்டல என்.டி.சி., ஆலைகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த கூட்டத்தை, செப்., 21ல், கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எச்.எம்.எஸ்., ஏ.டி.பி., என எட்டு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, என்.டி.சி., பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம், காட்டூர் ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஐ.என்.டி.யூ.சி., தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில், எச்.எம்.எஸ்., தலைவர் ராஜாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கடந்த 16 மாதங்களாக, என்.டி.சி., ஆலைகள் சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகி வரும் சூழலில், தென் மண்டல என்.டி.சி., ஆலைகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த கூட்டத்தை, செப்., 21ல் கோவையில் நடத்துவது, ஆலைகளை முழுமையாக இயக்க வேண்டும், அதுவரை தொழிலாளர்களுக்கு முழுச்சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது, ஒன்றுபட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிப்பது, என முடிவு செய்யப்பட்டது.என்.டி.சி., ஆலைகளை முழுமையாக இயக்குவதற்கு, தமிழக முதல்வர் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது தொடர்பாக, முதல்வரை சந்திப்பது என்பன, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X