பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, தொடர் விழிப்புணர்வு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பெரும்பாலானோருக்கு குற்றச்சம்பவங்கள் ஏற்படும் போது அதை தடுக்கவும், புகார் அளிக்கவும் தெரிவதில்லை.
  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான  குற்றங்கள் குறித்து, தொடர் விழிப்புணர்வு

கோவை:பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பெரும்பாலானோருக்கு குற்றச்சம்பவங்கள் ஏற்படும் போது அதை தடுக்கவும், புகார் அளிக்கவும் தெரிவதில்லை. இதைக்கருத்தில் கொண்டு, மாவட்ட போலீஸ் சார்பில், பெண்கள் உதவி மைய போலீஸ் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவினர் தொடர்ந்து பள்ளிகள், கல்லுாரிகள், பெண்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் பெண்கள், பொதுமக்களுக்கு குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, 1098, வங்கிக்கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால், 155260 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X