பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம் வருவாய் அலுவலர் ஆய்வு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:தனியார் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம், ஹரிஹரன் மருத்துவமனை, ஸ்மைல், சபிதா, கே.பி.எஸ். ஆகிய 4 மருத்துவமனைகள் இணைந்து, மெட்ரோ மேல்நிலைப் பள்ளியில், இலவச தடுப்பூசி முகாமை நடத்தியது.கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, 1,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை,
 கொரோனா தடுப்பூசி முகாம் வருவாய் அலுவலர் ஆய்வு

மேட்டுப்பாளையம்:தனியார் பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம், ஹரிஹரன் மருத்துவமனை, ஸ்மைல், சபிதா, கே.பி.எஸ். ஆகிய 4 மருத்துவமனைகள் இணைந்து, மெட்ரோ மேல்நிலைப் பள்ளியில், இலவச தடுப்பூசி முகாமை நடத்தியது.கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, 1,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆய்வு செய்தார். தடுப்பூசிகள் முறையாக போடப்படுகிறதா, வழிமுறைகளை மருத்துவமனை ஊழியர்கள் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தாசில்தார் ஷர்மிளா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.* மேட்டுப்பாளையம் ரோட்டரி பிரைம் சங்கமும், சத்யசாய் சேவா சமிதியும் இணைந்து சாய்பாபா கோவிலில் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினர். இதில், 300 சத்திய சாய் சேவா அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் நிர்வாகிகள் ரோட்டரி பிரைம் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் நகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 500 தடுப்பூசிகளும், லட்சுமி திருமண மண்டபத்தில், 1,000, ஆயர்பாடி அரசுப் பள்ளியில், 250, சேரன் நகர் மடோனா விடுதியில், 250, அரசு மருத்துவமனையில், 1,000 தடுப்பூசிகள் என, நேற்று ஒரே நாளில் மேட்டுப்பாளையம் தாலுகாவில், 4,300 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X