தி.மு.க., சின்னத்தில் வென்ற பிற கட்சிகள் எதிர்க்கட்சிகளாக கருத கூடாது என வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சின்னத்தில் வென்ற பிற கட்சிகள் எதிர்க்கட்சிகளாக கருத கூடாது என வழக்கு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (34)
Share
சென்னை : 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதி, சட்டசபையில் பேச, தனியாக நேரம் ஒதுக்கவோ, இருக்கை ஒதுக்கவோ கூடாது' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த, வழக்கறிஞர் லோகநாதன் தாக்கல் செய்த மனு:சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
DMK, Madras HC, High Court

சென்னை : 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதி, சட்டசபையில் பேச, தனியாக நேரம் ஒதுக்கவோ, இருக்கை ஒதுக்கவோ கூடாது' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த, வழக்கறிஞர் லோகநாதன் தாக்கல் செய்த மனு:சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டனர்.அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட புரட்சி பாரத வேட்பாளர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

இவர்கள் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்; தி.மு.க., - அ.தி.மு.க., உறுப்பினர்கள் அல்ல. தேர்தலுக்காக, இவ்வாறு செயல்பட்டு உள்ளனர்; வாக்காளர்களை ஏமாற்றி உள்ளனர்.ஒரு கட்சியில் இருந்து விட்டு, மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், வாக்காளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள், வேட்புமனு தாக்கலின் போது, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் எனக் கூறி, பொய்யான மனுவை அளிக்கின்றனர். இதெல்லாம் தேர்தல் கமிஷனுக்கு தெரிந்தும், அமைதியாக இருக்கிறது; அனுமதி அளிக்கிறது.


latest tamil news



தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, சின்னப்பா, பூமிநாதன், வேல்முருகன்.அப்துல்சமது, சதன் திருமலைக்குமார், ரகுராமன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ஜெகன் மூர்த்தி ஆகியோரை, சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எனக்கருதி, இருக்கைகள் ஒதுக்கிஉள்ளனர்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள், எப்படி எதிர்க்கட்சிகளின் பணிகளை செய்ய முடியும்?ஆளும் கட்சிக்கும், இவர்கள் சார்ந்த கட்சிக்கும் இடையே பிரச்னை எழுந்தால், கொறடாவின் உத்தரவை பின்பற்றுவரா அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர் உத்தரவுக்கு கட்டுப்படுவரா?

சட்டசபை அனைத்து கட்சிகளின் தலைவர் கூட்டத்தில், இவர்களும் பங்கேற்கின்றனர். இது, ஒரு மோசமான முன்னுதாரணம். எனவே, சட்டசபையில் இவர்களுக்கு என தனியாக நேரமோ, இருக்கை ஒதுக்கவோ கூடாது என, உத்தரவிட வேண்டும். சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத இந்த கட்சிகளை, சட்டசபை அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது என, உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X