பொது செய்தி

தமிழ்நாடு

இ.கம்யூ., சார்பில் நாடாளுமன்ற கூட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
அன்னுார்:இந்திய கம்யூ. சார்பில், அன்னூர் ஒன்றியத்தில், ஆத்திக்குட்டை, கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் செந்தாம்பாளையத்தில், போட்டி நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டது. சபாநாயகராக ரங்கசாமி செயல்பட்டார்.தேசியக்கொடி ஏற்றி, கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேல் பேசுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தால், தொழிலாளர்களின் உரிமை

அன்னுார்:இந்திய கம்யூ. சார்பில், அன்னூர் ஒன்றியத்தில், ஆத்திக்குட்டை, கெம்பநாயக்கன்பாளையம் மற்றும் செந்தாம்பாளையத்தில், போட்டி நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டது. சபாநாயகராக ரங்கசாமி செயல்பட்டார்.தேசியக்கொடி ஏற்றி, கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேல் பேசுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தால், தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது முதலாளிகளுக்கு ஆதரவான சட்டம். மத்திய அரசின் மின்சார சட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளது. வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களும், இடைத்தரகர்களும் தான் பயன்பெறுவார்கள். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்,'' என்றார்.ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, அழகிரி மற்றும் பவித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X