பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த அலை வந்தாலும் சமாளிக்கலாம்! பெ.நா.பாளையம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு கருவி

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், தனியார் பங்களிப்புடன், ரூபாய். 70 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் தயாரிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளது.கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை சமாளிக்க அனைத்து வகையான ஏற்பாடுகளையும், மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. தொற்று பரவலை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தொற்று ஏற்பட்ட பின்
 அடுத்த அலை வந்தாலும் சமாளிக்கலாம்! பெ.நா.பாளையம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு கருவி

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், தனியார் பங்களிப்புடன், ரூபாய். 70 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் தயாரிப்பு கருவி நிறுவப்பட்டுள்ளது.கொரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை சமாளிக்க அனைத்து வகையான ஏற்பாடுகளையும், மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. தொற்று பரவலை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தொற்று ஏற்பட்ட பின் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில், கோவிட் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தில், 36 படுக்கைகள் உள்ளன. தொற்று ஏற்பட்டால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி தாராளமாக கிடைக்க, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டி ஐ.டி.சி., நிறுவனம், ரூ.70 லட்சம் மதிப்பில், ஆக்சிஜன் தயாரிப்பு கருவியை நிறுவியுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறியதாவது:இது, ஆக்சிஜன் செறிவூட்டி கருவியாக இல்லாமல், ஆக்சிஜன் தயாரிப்பு கருவியாக செயல்படுகிறது. இக்கருவி, காற்றை நேரடியாக உறிஞ்சி அதிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, ஆக்சிஜனை தூய்மைப்படுத்தி, மேலும் சில தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தி, குழாய்கள் வழியாக, நோயாளிகளுக்கு சென்று சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி, 250 எல்.பி.எம்., திறன் உள்ளது. அதாவது, ஒரு நிமிடத்துக்கு, 250 லிட்டர் ஆக்சிஜனை வழங்கும் திறன் கொண்டது. இதை நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு பிரித்து வழங்கலாம். இக்கருவி விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X