சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 நாளில் சிக்கிய கொள்ளையன்: 23 பவுன் நகைகள் மீட்ட போலீசார்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை, மூன்று நாட்களில் கைது செய்து, 23 பவுன் நகைகளை, போலீசார் மீட்டனர்.மேட்டுப்பாளையத்தில் வழிப்பறி, வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஜெய்சிங் உத்தரவில், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் செல்வநாயகம்,
 3 நாளில் சிக்கிய கொள்ளையன்: 23 பவுன் நகைகள் மீட்ட போலீசார்

மேட்டுப்பாளையம்:வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை, மூன்று நாட்களில் கைது செய்து, 23 பவுன் நகைகளை, போலீசார் மீட்டனர்.மேட்டுப்பாளையத்தில் வழிப்பறி, வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஜெய்சிங் உத்தரவில், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் செல்வநாயகம், தாமோதரன் ஆகியோர் தலைமையில், இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுவினர், மூன்று நாட்களில் கொள்ளையன் சந்தோஷ்குமாரை கைது செய்து, 23 பவுன் நகைகளை மீட்டனர்.டி.எஸ்.பி., ஜெய்சிங் கூறியதாவது:மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் ஆகிய பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் சந்தோஷ்குமாரை, 31, மூன்று நாட்களில் மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். திருடிய நகைகள் அனைத்தும் மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள்.சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராமப்பகுதிகளில் பகலில், போலீசார் ரோந்து பணி சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் வந்தால், குடியிருப்பவர்கள் அவரிடம் விசாரிக்க வேண்டும். திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X