கோவில்பாளையத்தில் அதிகரிக்கும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், நேற்று கீரணத்தத்தில், மூன்று பேருக்கு, கோவில்பாளையம் பேரூராட்சியில் இருவருக்கு, கொண்டையம்பாளையம் ஊராட்சியில் ஒருவருக்கு என ஆறு பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று, கீரணத்தம் பண்ணாரி அம்மன் நகர், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.நேற்றுமுன்தினம், கோட்டைப்பாளையம், வெள்ளமடை ஏ.டி.காலனி,

கோவில்பாளையம்:எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், நேற்று கீரணத்தத்தில், மூன்று பேருக்கு, கோவில்பாளையம் பேரூராட்சியில் இருவருக்கு, கொண்டையம்பாளையம் ஊராட்சியில் ஒருவருக்கு என ஆறு பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று, கீரணத்தம் பண்ணாரி அம்மன் நகர், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.நேற்றுமுன்தினம், கோட்டைப்பாளையம், வெள்ளமடை ஏ.டி.காலனி, அத்திப்பாளையம் கோல்டன் ரெசிடென்சி ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் ஐந்து பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.நேற்று, 218 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 2,250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்னுார் ஒன்றியத்தில், 2 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்னுார் தாலுகாவில் நேற்று ஒரே நாளில், 4,850 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று, பசூர் மற்றும் கணுவக்கரையில் இருவருக்கு தொற்று உறுதியானது. 180 பேருக்கு தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. அன்னுார் தாலுகாவில் நேற்று 398 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X