பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் ஆண்டு விழா

Added : ஆக 31, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின், 22ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு வேளாண் விற்பனை துறை சார்பில் கட்டப்பட்டுள்ள உழவர் சந்தையில், 78 கடைகள் உள்ளன. இங்கு, 2000ம் ஆண்டு உழவர் சந்தை துவக்கப்பட்டது. உழவர் சந்தை துவங்கி, 21 ஆண்டுகள் முடிந்து, நேற்று, 22ம் ஆண்டு துவக்க விழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின், 22ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு வேளாண் விற்பனை துறை சார்பில் கட்டப்பட்டுள்ள உழவர் சந்தையில், 78 கடைகள் உள்ளன. இங்கு, 2000ம் ஆண்டு உழவர் சந்தை துவக்கப்பட்டது. உழவர் சந்தை துவங்கி, 21 ஆண்டுகள் முடிந்து, நேற்று, 22ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.விழாவுக்கு, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, நேரடியாக விற்பனை செய்வதன் வாயிலாக, விவசாயிகளும், வாடிக்கையாளர்களும் பெரிதும் பயன் அடைகின்றனர். எனவே, தொடர்ந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும்,'' என்றார். கேக் வெட்டி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி நிர்வாக அலுவலர்கள் சுபாஷ், சம்பத்குமார், ரமேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X