பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியுடன் ஏரியாவை இணைக்க எதிர்ப்பு; இப்படியே இருக்கட்டுமே...! நான்கு ஊராட்சி மக்கள், பிரதிநிதிகள் கருத்து

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:''நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள கருமத்தம்பட்டியுடன் இணைக்க விருப்பமில்லை,'' என, நான்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக, கடந்த வாரத்தில் அறிவிப்பு வெளியானது. கருமத்தம்பட்டியுடன் அருகில் உள்ள கணியூர்,

கருமத்தம்பட்டி:''நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள கருமத்தம்பட்டியுடன் இணைக்க விருப்பமில்லை,'' என, நான்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக, கடந்த வாரத்தில் அறிவிப்பு வெளியானது. கருமத்தம்பட்டியுடன் அருகில் உள்ள கணியூர், கிட்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், கரவளி மாதப்பூர் உட்பட நான்கு ஊராட்சிகளையும் இணைக்கும் வகையில், ஊராட்சிகளின் வருமானம், மக்கள்தொகை, பரப்பளவு உட்பட விபரங்களை, நகராட்சி நிர்வாக துறையினர் சேகரித்தனர்.நேற்று முன்தினம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாதேவி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர், கிட்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், கரவளி மாதப்பூர் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தங்கள் ஊராட்சியை கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, விருப்பம் இல்லை எனவும் மனு அளித்துள்ளனர்.மக்களுக்கு அவதிகணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி கூறியதாவது:கடந்த, 1958ல் உருவான எங்கள் ஊராட்சியில், 14 குக்கிராமங்கள் உள்ளன. ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர். நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் வரிகள் அதிகமாகும். தற்போது, 16 பேர் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளோம். அது, ஒன்று அல்லது இரண்டாக குறைக்கப்படும். இதனால், மக்கள் அவதிக்குள்ளாவார்கள். கருமத்தம்பட்டியுடன் இணைக்க விருப்பமில்லை என்பதை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்த கருத்தாக தெரிவித்துள்ளோம். மேலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். ஊராட்சி அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, கருத்து கேட்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.கிட்டாம்பாளையம் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:எங்கள் ஊராட்சியில், 950க்கும் மேற்பட்ட ஏழை மக்கள், 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். கருமத்தம்பட்டியுடன் இணைக்கப்பட்டால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். விவசாயம் பாதிக்கப்படும். வரி உயர்வால் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்படுவர். மக்கள் பிரதிநிதிகளாக உள்ள பெண்களின் வாய்ப்பு பறிபோய்விடும். சுயசார்பாக எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்வோம். மொத்தத்தில், ஊராட்சியாகவே இருக்க அனைவரும் விரும்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கையெழுத்து இயக்கம்செம்மாண்டாம்பாளையம் தலைவர் ஜானகி கூறுகையில், ''எங்கள் ஊராட்சியில் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கூலி வேலைக்கு செல்வோர் தான் அதிகம். வருமானம் குறைவாகத்தான் உள்ளது. நகராட்சியானால், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்காது. அதை சமாளிக்க மக்களால் முடியாது. அதனால், விருப்பம் இல்லை என, தெரித்துள்ளோம். இதுகுறித்து மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்,'' என்றார்.கரவளி மாதப்பூர் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''ஊராட்சியில் விவசாயிகள், விசைத்தறியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களின் வருமானமும் குறைவாகவே உள்ளது. நகராட்சிக்கான வரிகளை கட்டும் அளவுக்கு அவர்களின் வாழ்வாதாரம் இல்லை. அதனால், தனித்தன்மையை இழக்காமல் ஊராட்சியாகவே தொடரவே விரும்புகிறோம் என்ற கருத்தை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X