பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.16 கோடி ஊசி மருந்துக்கு கண்ணீருடன் நிதி திரட்டும் சிறுமியின் பெற்றோர்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
தஞ்சாவூர் : தஞ்சாவூரில், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, 2 வயது குழந்தையின் பெற்றோர், கண்ணீருடன் நிதி திரட்டி வருகின்றனர்.தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை அருகே சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 32. ரெப்கோ வங்கியில் உதவி மேலாளர். இவரது மனைவி எழிலரசி, 32, அதே வங்கியில் இளநிலை உதவியாளர்.இவர்களின், 2 வயது மகள் பாரதிக்கு, முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் இருப்பது, 9ம் தேதி
SMA, Spinal Muscular Atrophy, genetic disease, SMA Drug

தஞ்சாவூர் : தஞ்சாவூரில், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, 2 வயது குழந்தையின் பெற்றோர், கண்ணீருடன் நிதி திரட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை அருகே சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 32. ரெப்கோ வங்கியில் உதவி மேலாளர். இவரது மனைவி எழிலரசி, 32, அதே வங்கியில் இளநிலை உதவியாளர்.இவர்களின், 2 வயது மகள் பாரதிக்கு, முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் இருப்பது, 9ம் தேதி கண்டறியப்பட்டது. சிறுமி தானாக எழுந்து நிற்க முடியாமல் தவித்து வருகிறார்.

பரிசோதித்த டாக்டர்கள், '16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும்' எனக் கூறியுள்ளனர்.ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த சிறுமி மித்ரா, சிகிச்சை பெற்ற பெங்களூரு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil newsஇந்நிலையில் ஜெகதீஸ், எழிலரசி தம்பதி வசிக்கும் தெருவாசிகள் இணைந்து, பாரதியின் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை நிதி திரட்டினர். தஞ்சாவூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், விளார் கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பெண்கள், தங்களின் ஒருநாள் சம்பளம் 35 ஆயிரம், போர்வெல் ஆப்பரேட்டர்கள், தன்னார்வலர்கள் என பலரும் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கினர்.

எழிலரசி கூறியதாவது: என் மகளுக்கு வந்துள்ள நோய், 10 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு வரும் நோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, மரபணு சோதனை செய்து கொண்டால், ஆரம்பத்திலேயே இதுபோன்ற நோயை தவிர்க்கலாம். செப்டம்பர் இறுதிக்குள், 16 கோடி ரூபாய் தேவை. தற்போது, 1.75 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது. அரசும், பொதுமக்களுக்கும் கருணை காட்ட வேண்டும்.

ஏற்கனவே மித்ரா என்ற குழந்தைக்கு, நாமக்கல், குமாரபாளையத்தில் உள்ள வங்கி மூலம் கணக்கு துவங்கி, நிதி திரட்டினர். அந்த அடிப்படையில், நாங்களும் அதே வங்கியை அணுகி, நிதி திரட்ட கணக்கு துவங்கியுள்ளோம். இதை பலரும் சந்தேகத்துடன் கேள்வி கேட்பது, மனதுக்கு கஷ்டமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
குழந்தையின் தந்தை ஜெகதீஸ் தொடர்பு எண்: 9791793435

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
03-செப்-202114:40:33 IST Report Abuse
KUMAR. S உங்கள் குழந்தை விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறோம்..
Rate this:
Cancel
Sugumar - Chengalpattu,இந்தியா
31-ஆக-202117:04:14 IST Report Abuse
Sugumar 9791793435 whatsapp contact. Mobile no child father you will get account details.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
31-ஆக-202115:35:26 IST Report Abuse
M Selvaraaj Prabu உதவி செய்ய நினைத்தாலும், இந்த மருந்து ஏன் இந்த அளவு விலை என்று ஒருவருமே (மருத்துமனையோ, டாக்டர்களோ, மருந்து விற்பவர்களோ, தயாரிப்பவர்களோ) விளக்கம் தருவது இல்லை. அந்த மருத்துவமனை இந்த வியாதிக்கு எவ்வளவு டிஸ்கௌண்ட் கொடுத்து உள்ளது, அதில் பணி புரிபவர்கள் எந்த அளவு உதவி செய்கிறார்கள் என்ற விவரமும் ஒருவரும் தெரிவிப்பது இல்லை. அதனால், எனவே இது ஒரு விதமான பகல் கொள்ளை என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X