அடடே... என்ன ஒரு ஆச்சரியம்...!தள்ளுமுள்ளு...வாக்குவாதம் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடடே... என்ன ஒரு ஆச்சரியம்...!தள்ளுமுள்ளு...வாக்குவாதம் இல்லை

Added : ஆக 31, 2021
Share
அன்னுார்:பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த காலம் மாறி, வாங்க தடுப்பூசி போட்டுக்கலாம் என சுகாதாரத்துறையினர் பொது மக்களை அழைத்தது வியப்பை ஏற்படுத்தியது.கடந்த ஒரு வாரத்தில், அன்னுார் வட்டாரத்தில் ஐந்து நாட்கள் முகாம் நடந்தது. சராசரியாக தினமும் 2,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் 2,600 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அன்னுார் மனவளக்கலை மன்றத்தில் நேற்று

அன்னுார்:பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த காலம் மாறி, வாங்க தடுப்பூசி போட்டுக்கலாம் என சுகாதாரத்துறையினர் பொது மக்களை அழைத்தது வியப்பை ஏற்படுத்தியது.கடந்த ஒரு வாரத்தில், அன்னுார் வட்டாரத்தில் ஐந்து நாட்கள் முகாம் நடந்தது. சராசரியாக தினமும் 2,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் 2,600 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அன்னுார் மனவளக்கலை மன்றத்தில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.அன்னுார் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் மையம் நேற்று துவங்கியது. ஒரே நாளில் இம்மையத்தில் 700 கோவிஷீல்டு, 100 கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டன. அல்லிக்காரம்பாளையம், குமாரபாளையம், ஊத்துப்பாளையம், கணேசபுரம், பட்டக்காரன் புதுார் உட்பட ஏழு இடங்களில் நேற்று 2,600 தடுப்பூசிகள் போடப்பட்டன.இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோவில்பாளையம் குமரன் மருத்துவமனை சார்பில் பொகலுாரில் இலவசமாக, 280 தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஹரி பிரசாத், ஊராட்சி தலைவர் நடராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.வழக்கமாக தடுப்பூசி போடுவதற்கு நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருப்பர். தடுப்பூசி டோக்கன் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்படும். செல்வாக்கான நபர்கள் புறவழியை பயன்படுத்தி டோக்கன் வாங்கிச் செல்வர்.ஆனால் நேற்று, குமாரபாளையத்தில் சுகாதார ஆய்வாளர் இனிய ராஜ் தடுப்பூசி மையத்தின் வெளியே நின்று, தடுப்பூசி போட வாங்க... வாங்க... என்று அழைத்து டோக்கன்களை கொடுத்தார். அன்னுார் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு 7:00 மணி வரையிலும் தடுப்பூசி இருப்பு இருந்தது. தடுப்பூசிக்கு மக்கள் சுற்றித்திரிந்த நிலை மாறி தற்போது எளிதாக கிடைக்கும் நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X