பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேர மையங்கள் ரொம்ப... ரொம்ப... 'பிசி'

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் துவங்கப்பட்டுள்ள, 24 மணி நேர தடுப்பூசி மையங்களில், 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க, கோவை அரசு மருத்துவமனையில், கடந்த, 23ம் தேதியும், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கடந்த, 24ம் தேதியும், 24 மணி நேரமும் செயல்படும், தடுப்பூசி மையங்கள் துவங்கப்பட்டன. துவங்கியது
 24 மணி நேர மையங்கள்  ரொம்ப... ரொம்ப... 'பிசி'

கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் துவங்கப்பட்டுள்ள, 24 மணி நேர தடுப்பூசி மையங்களில், 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க, கோவை அரசு மருத்துவமனையில், கடந்த, 23ம் தேதியும், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கடந்த, 24ம் தேதியும், 24 மணி நேரமும் செயல்படும், தடுப்பூசி மையங்கள் துவங்கப்பட்டன. துவங்கியது முதல், ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். துவங்கி ஒரு வாரம் ஆன நிலையில், இரு மையங்களிலும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ள வருபவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,'' என்றார்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறுகையில், ''தமிழகத்தில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில்தான், அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.எந்த நேரத்தில் வந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசியும் உள்ளது. கர்ப்பிணிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தனி வரிசை உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X