தலிபான்கள் கொண்டாட்டம் ; ஆப்கனில் இருந்து முழுமையாக வெளியேறியது அமெரிக்கா

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
காபூல்: ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா நடத்திய 20 ஆண்டு போர் முடிந்தது. மீண்டும் ஆப்கன் தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. இன்றுடன் முழுமையாக வெளியேறியது அமெரிக்கா. இதனையடுத்து, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர். ஏற்கனவே, திட்டமிட்டபடி ஆக.31 நிறைவு பெறுவதற்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் முழுவதும் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ள அமெரிக்கா, கடைசி வீரர் வெளியேறும்
தலிபான், ஆப்கன், அமெரிக்கா, ராணுவம்,taliban, afghanistan, us, usa, army, america,

காபூல்: ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா நடத்திய 20 ஆண்டு போர் முடிந்தது. மீண்டும் ஆப்கன் தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. இன்றுடன் முழுமையாக வெளியேறியது அமெரிக்கா. இதனையடுத்து, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர்.

ஏற்கனவே, திட்டமிட்டபடி ஆக.31 நிறைவு பெறுவதற்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் முழுவதும் வெளியேறி விட்டதாக அறிவித்துள்ள அமெரிக்கா, கடைசி வீரர் வெளியேறும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளது.இது தொடர்பாக வாஷிங்டன்னில் அமெரிக்க தளபதி கென்னத் மெக்கன்ஜி கூறியதாவது : ஆப்கனில் இருந்து நமது ராணுவ வீரர்கள் முழுமையாகவும், மீட்பு பணிகள் முழுவதும் நிறைவு பெற்று விட்டத என்பதை அறிவிக்கிறேன். அமெரிக்க ராணுவம் வெளியேறியது, கடந்த 2001 செப்.,11 பிறகு துவங்கிய 20 வருட போர் நிறைவு பெற்றதையும் குறிக்கிறது. காபூலில் இருந்து கடைசி அமெரிக்க விமானம், திங்கட்கிழமை (ஆக.,30) இரவு 19:29 ஜிஎம்டி மணிக்கு கிளம்பியது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறியதாவது: அமெரிக்க ராணுவம் வெளியேறியதன் மூலம் முழுமையான சுதந்திரம் பெற்று விட்டோம் என்றார்.

தலிபான் மூத்த தலைவர் அனாஸ் ஹக்கானி கூறும்போது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை நினைத்து பெருமைப்படவதாக கூறினார்.

அமெரிக்க ராணுவத்தினர் வெளியேறியதை, பல இடங்களில் தலிபான்கள் துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
31-ஆக-202117:46:36 IST Report Abuse
மலரின் மகள் எதற்காக போனார்கள் ஏன் புறமுதுகிட்டு திரும்பினார்கள். கோடான கோடி நவீன ரக ஆயுதங்களை எதற்காக அங்கே யாருக்காக விட்டு திரும்புகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிந்தால் சரிதான். சும்மா இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது வியட்நாம், கோரிய தீபகற்பம், சிரியா ஏமன் என்று ரசியா ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பிரதேசத்தில் இவர்கள் நுழைந்து விடுவார்கள். ஜம்பம் மிக பெரிதாக இருக்கும். நேரடி யுத்தம் செய்யமாட்டார்கள் ஆனால் லட்சக்கணக்கில் ஆர்மி வீரர்களை களமிறக்கி வைத்திருப்பார்கள். பிரமாண்டமான பாசறைகளை அமைத்து அங்கே தங்கி இருப்பார்கள். ஆளில்லா விமானங்கள் மூலம் மட்டுமே யுத்தம் செய்கிறார்கள். என்ன வீரமோ பின்லா வை காலி செய்வதற்கு எத்துணையோ வருடங்கள் எத்துணையோ செலவுகள். அதில் காலே அரைக்கால் சதவீதத்திற்கும் குறைவாக இவர்களின் நட்பு நாடான பாகிஸ்தானின் ஏதாவது ஒரு தீவிரவாத கும்பலுக்கு கொடுத்திருந்தால் என்றோ அவர்கள் காரியம் முடித்திருப்பார்கள் என்று சிலர் சிரிக்கிறார்கள். இவர்களின் ராணுவ யுக்திகள் பல்வேறு தேசங்களில் இவர்களின் கூட்டணி படையுடன் சென்று டேரா அடித்து விட்டு பின்னால் வெறும் கைகளை வீசி கொண்டும், கொண்டு சென்றதை அங்கேயே விட்டு விட்டு வருவதுமாக இருக்கிறார்கள். ஆகையால் தான் இவர்களை உலகின் வல்லரசு என்றும் மிகப்பிரமாண்டமான ராணுவம் என்றும் பறை சாற்றுகிறார்கள். நிறைய தீவிரவாதிகளுக்கும் பயங்கர வாதிகளுக்கும் கூட இவர்கள் பல்வேறு தேசங்களில் ராணுவ பயிற்சி தந்திருக்கிறார்கள். மூன்று லட்சம் ஆப்கான் வீரர்களை தலை சிறந்த பயிற்ச்சியை தந்து கடைசியில் அவர்கள் தாக்குதல் விமானம் முதல் போக்குவரத்து ஹெலிகாப்டர் வரையில் எதையும் அசைத்து கூட வைக்கவில்லை. அமெரிக்கா வெளியேறுகிறது, தலிபான் வருகிறார்கள் என்றதும் அவர்கள் எங்கயோ தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றுவிட்டார்கள். டிரம்ப் மிரட்டு மிரட்டு என்று மிரட்டியே அடக்கி வைத்திருந்தார். இப்போதோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. தாலிபான்களும் இன்னபிற கூட்டத்தினரும் மிரட்டுகிறார்கள் பெரியண்ணனை. ஒன்றை மட்டும் சொல்லலாம், ஆமை ஆமினா என்ற வகையில் இவர்கள் தொடர்கிறார்கள், அதில் இவர்கள் தான் பெரியவர்கள். இந்தியா அவசரப்படவே கூடாது. தலிபான்கள் திணறுவார்கள், கெஞ்சுவார்கள். பழைய கணக்கை நாம் சரி செய்து கொண்டுதான் அவர்களுக்கு செவி மடுக்கவேண்டும். இந்தியாவை விட்டால் அவர்களுக்கு வழியேதும் இல்லை என்று செய்து வைத்திருக்கிறது இன்றைய அமெரிக்க கூட்டுப்படைகள் அமைப்பும் மேற்கத்திய உலகங்களும். உலகத்துடன் தொடர்பு கொள்ளவேண்டும், அரசியல் பொருளாதார, சமூக மேம்பாடு என்று ஏதுவாகிலும், முதலில் இந்தியாவுடன் பேசி நன்மதிப்பை பெறுங்கள் என்பது முழுதும் அனைத்து ஆப்கான் குழுக்களுக்கும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் வெளிப்படையாகவே நீங்கள் இந்தியாவுடன் பேசுங்கள் என்று சொல்லிவிட்டார், அதன் பிறகுதான் நாங்கள் உங்களின் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம் என்று அதையே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் தேசங்கள் வழிமொழிந்து விட்டன. கனடாவும் அப்படியே. பாகிஸ்தான் உண்மையில் பின்புலத்தில் பயந்து கொண்டுதான் இருக்கிறது, அகதிகள் பிரச்சினை முதல் தெஹ்ரி இ தலிபான் அமைப்புகள் வரையன்றி இந்தியாவின் ரா அமைப்பு பின்புலத்தில் எதோ செய்கிறது என்று அச்சமும் நடுக்கமும் கூட வர்களுக்கு இருப்பது தெரிகிறது. சீன நேரடியக எந்த தேசத்துடனும் ராணுவ சண்டைக்கு செல்வதில்லை, எந்த பயங்கரவாத அமைப்புக்களை எதிர்த்தும் ஐநாவின் அமைதி படை மூலமாக கூட அவர்கள் எந்த சிறந்த பங்கேற்பையும் தர முடியவில்லை. இந்த விஷயத்தில் அவர்களின் கையாலாகாததனம் உலகம் எல்லி நகையாடும் படிக்கு உள்ளது. தலிபான்களின் பல்வேறு அமைப்புக்களுடன் அவர்கள் பாகிஸ்தானியர்கள் மூலம் பேசி இருக்கிறார்கள். யாருடன் பேசுகிறோம் என்று தெரியாமலேயே லூசுத்தனமாக இந்தியாவின் பரிபூரண ஆசைக்கும் நட்பிற்கும் நாடி இருக்கும் இரண்டு குழுக்களிடம் அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் எல்லா தாலிபான்களும் இந்தியாவிற்கு மதத்தின் பெயரால் எதிரானவர்கள் என்று கூறுகெட்டத்தனமாக பேசி எதோ சொல்லி இருக்கிறார்கள். அனைத்தும் யாருக்கு வந்து சேரவேண்டுமோ வந்து சேர்ந்து விட்டது என்றும் அதனால் இந்தியா அதை அறிந்து பலமாக சிரித்ததாகவும் சங்கதிகள் இருக்கின்றனவாம். நமது இன்றைய நிலை பற்றி சொவதென்றால் குன்றேறி யானைப்போர் காண்கிறோம். மகிழ்கிறோம்.
Rate this:
Cancel
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-202117:33:13 IST Report Abuse
Suresh Gurusamy இந்த கையாலாகத அமெரி்க்கா 20 ஆண்டுகளில் எந்த உறுப்படியான வேலையும் செய்யவில்லை...80000 தலிபான்களை சமாளிக்க முடியாத நீயெல்லாம் ஒரு வல்லரசு..வரும் காலங்1ௌில் நாட்டாமை 7ன்று எந்த நாட்டையாவது மிரட்டினால் அமெரிக்கா மூக்கு உடைபடும் என்பதற்கு ஒரு உதாரணம்.தலிபான் வீரத்திற்கு எடுத்துக்காட்டு அமெரிக்காவை மண்ணை கவ்வ வைத்து காபூலை கைப்பற்றியது.சல்யூட் தாலிபான்ஸ்...
Rate this:
Cancel
maharaja - திருநெல்வேலி,இந்தியா
31-ஆக-202117:27:47 IST Report Abuse
maharaja அவன பொருத்த வரை அமேரிக்கா காரன் வெளிய போய்ட்டான். அந்த அந்த கூட்டத்தை அந்த மக்கள் ஆளுவது தான் சரியானது. அடுத்து ஆப்கான் மக்களுக்கு சரியான ஆட்சி கிடைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X