பொது செய்தி

தமிழ்நாடு

காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

Added : ஆக 31, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் அறிக்கை:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், ஒவ்வொரு பருவத்திலும், வட்டாரத்துக்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, காப்பீடு மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.காரீப் பருவத்தில்,

கிணத்துக்கடவு:காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் அறிக்கை:பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், ஒவ்வொரு பருவத்திலும், வட்டாரத்துக்கேற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, காப்பீடு மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.காரீப் பருவத்தில், கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில், நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம் ஆகியன முக்கிய மானாவாரி பயிர்களாக விதைக்கப்பட்டுள்ளது.இப்பயிர்களை, இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு ஏக்கர் சோளம் சாகுபடிக்கு காப்பீடு கட்டணமாக, 226 ரூபாய்; மக்காச்சோளத்துக்கு, 600 ரூபாய்; நிலக்கடலை - 597; கொள்ளு சாகுபடிக்கு, 342 ரூபாயும் செலுத்த வேண்டும்.இம்மாதம், 31ம் தேதி காப்பீடு மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகம், போட்டோ ஆகியவற்றுடன் இ - சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில், பிரிமீய தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் அல்லது உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X