இளநீர் தேவை அதிகரிப்பு :பண்ணை விலை ரூ. 28| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளநீர் தேவை அதிகரிப்பு :பண்ணை விலை ரூ. 28

Added : ஆக 31, 2021
Share
ஆனைமலை;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீரின் பண்ணை விற்பனை விலையை, 28 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீர் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, புதுடில்லி, மும்பை பகுதிகளுக்கு அதிகளவில் இளநீர் அனுப்பப்படுகிறது.தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து குறைவாக உள்ளது. தினமும், 2.5 முதல் மூன்று லட்சம் இளநீர் வரத்து இருந்தும்

ஆனைமலை;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், இளநீரின் பண்ணை விற்பனை விலையை, 28 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீர் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, புதுடில்லி, மும்பை பகுதிகளுக்கு அதிகளவில் இளநீர் அனுப்பப்படுகிறது.தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து குறைவாக உள்ளது. தினமும், 2.5 முதல் மூன்று லட்சம் இளநீர் வரத்து இருந்தும் பற்றாக்குறையாக உள்ளது.இந்நிலையில், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எடைக்கு விற்பனை செய்தால், ஒரு டன் இளநீர், 11,000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். தேவை அதிகரிப்பதால், விலை உயர வாய்ப்புள்ளது.இத்தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X