பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபங்களுக்கு 'நோட்டீஸ்': தொற்று தடுப்பு வழிமுறைக்கு அறிவுரை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி திருமண மண்டபங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்,' என, நகராட்சி நிர்வாகம், அறிவுறுத்தி உள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில்,

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி திருமண மண்டபங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்,' என, நகராட்சி நிர்வாகம், அறிவுறுத்தி உள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த பரிசோதனை, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில், திருமண மண்டபங்களில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம், 'நோட்டீஸ்' வழங்கி அறிவுறுத்தியுள்ளது.நகராட்சி எல்லைக்கு உட்பட்ட கூட்டரங்குகள், சமுதாய கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில், இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ள திருமணம், இதர நிகழ்ச்சிகள் பற்றிய முழு விபரங்களை, நகராட்சி அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.விழாக்கள் குறித்து முன் கூட்டியே, ஒவ்வொரு, 15 நாட்களுக்கு ஒரு முறை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம், கை கழுவுதல், சானிடைசர் உபயோகம், சமூக இடைவெளி பின்பற்றுதல், உடல்வெப்பநிலை பரிசோதனை கருவி வாயிலாக பரிசோதித்தலை முறையாக பின்பற்ற வேண்டும்.அவ்வப்போது, அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் போது, வழிகாட்டு நெறிமுறைகளில் குறைபாடுகள் இருப்பின், மண்டப உரிமையாளருக்கு அல்லது பொறுப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.மேலும், திருமண மண்டபம், கூட்டரங்கு உரிமம் ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X