பொது செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' சட்டம் குறித்து விழிப்புணர்வு: பழங்குடியினருக்கு எஸ்.பி., அட்வைஸ்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
ஆனைமலை;ஆனைமலை அருகே, சேத்துமடையில், மாவட்ட எஸ்.பி., தலைமையில் 'போக்சோ' சட்டம் குறித்து, பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை அருகே, தம்மம்பதி கல்லாங்குத்து கிராமத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், மூன்று வயது பெண் குழந்தையை தாயேகொலை செய்த சம்பவம் நடந்தது. மேலும், பழங்குடியினர் கிராமங்களிலும் அதன் அருகிலுள்ள கிராமங்களிலும், சிறுமிகள்,
 'போக்சோ' சட்டம் குறித்து விழிப்புணர்வு: பழங்குடியினருக்கு எஸ்.பி., அட்வைஸ்

ஆனைமலை;ஆனைமலை அருகே, சேத்துமடையில், மாவட்ட எஸ்.பி., தலைமையில் 'போக்சோ' சட்டம் குறித்து, பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை அருகே, தம்மம்பதி கல்லாங்குத்து கிராமத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், மூன்று வயது பெண் குழந்தையை தாயேகொலை செய்த சம்பவம் நடந்தது. மேலும், பழங்குடியினர் கிராமங்களிலும் அதன் அருகிலுள்ள கிராமங்களிலும், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் திட்டமிட்டனர். மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் தலைமையில், சேத்துமடையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் ஹரிகிருஷ்ணன், கோப்பெருந்தேவி, எஸ்.ஐ., சின்னகாமணன் ஆகியோர் பங்கேற்றனர். பழங்குடியின மக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டன.எஸ்.பி., செல்வநாகரத்தினம் பேசியதாவது:பழங்குடியின மக்களிடம், 'போக்சோ' சட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், அறியாமையில் பலரும் குற்றங்கள் செய்கின்றனர். இதனால், கடுமையான தண்டனைக்கு உள்ளாகி சிரமப்படுகின்றனர்.பழங்குடியின கிராமங்களில் குழந்தை திருமணம் அதிக அளவு நடக்கிறது. குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். 18 வயதுக்கு உட்பட்டோரை திருமணம் செய்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால், 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X