பெங்களூருவில் சாலை விபத்து: ஓசூர் எம்எல்ஏ மகன் உள்ளிட்ட 7 பேர் பலி

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூருவில், சொகுசு கார், மின்கம்பத்தில் மோதியதில், ஓசூர் தொகுதி எம்எல்ஏ., மகன் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் கோரமங்கலா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று, நள்ளிரவு 2 மணியளவில் அதிவேகமாக வந்து மின்கம்பத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்தில்
பெங்களூரு, சாலைவிபத்து, ஒசூர், எம்எல்ஏ, மகன், பலி, உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூருவில், சொகுசு கார், மின்கம்பத்தில் மோதியதில், ஓசூர் தொகுதி எம்எல்ஏ., மகன் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.


latest tamil news



கர்நாடக மாநிலம் கோரமங்கலா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று, நள்ளிரவு 2 மணியளவில் அதிவேகமாக வந்து மின்கம்பத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.


latest tamil news



உயிரிழந்தவர்களில் ஒருவர், ஓசூர் தொகுதி எம்எல்ஏ., பிரகாஷின் மகன் கருணாசாகரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


latest tamil news


மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பான ஆடி காரில் அதிவேகமாக சென்ற கார் கட்டுபாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதியதால் விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் வேலை செய்யவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-202104:55:15 IST Report Abuse
ராஜா வந்த வேலை முடிந்துவிட்டது சென்றுவிட வேண்டியது தான். ஆடியில் போனால் என்ன ஆவணியில் போனால் என்ன? நமக்கும் மேலே ஒருவன் இருப்பதை உணரும் தருணம் இது.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
31-ஆக-202119:25:57 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஒழுக்கமே மேன்மை தரும். இறந்தவர்களுக்கு இது பயனில்லை. இருப்பவர்கள் மேன்மை அடையுங்கள்
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
31-ஆக-202118:49:16 IST Report Abuse
Yesappa சிறு வயது பையன்..பாவம்.. ஆன்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X