பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: வீடுகளில் குழந்தை பாதம் பதித்து கொண்டாட்டம்

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கிருஷ்ண பகவான் அவதரித்த நாள், கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பொள்ளாச்சி, டி. கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெருமாள், மோகன கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: வீடுகளில் குழந்தை பாதம் பதித்து கொண்டாட்டம்

பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கிருஷ்ண பகவான் அவதரித்த நாள், கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பொள்ளாச்சி, டி. கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெருமாள், மோகன கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்றும் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். லட்டு, சீடை உள்ளிட்ட பலகாரங்கள், பழவகைகள் படைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.அங்கலக்குறிச்சி கோபால்சுவாமி மலைக்கோவிலில், நந்தகோபால கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமாவுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. மேலும், உறியடி உற்சவம் நடந்தது. ஆனைமலை திரவுபதியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில், கிருஷ்ணர், ருக்மணி, சத்தியபாமாவுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், நேற்று கோ பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு அஷ்டாபிேஷகத்துடன் துவங்கிய விழா, கோ பூஜை, மகா தீபாராதனையுடன் நடந்தது. மாலையில், ஸ்ரீஹரி கந்த ஸ்ருதி குழுவினரின் பக்திப் பாடல்கள், இரவில் ஹரிவராசனம், நடை சாத்துதலுடன் விழா நிறைவடைந்தது.

வால்பாறைவால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், நேற்று, வீடுகளில் கோலமிட்டு, குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்தனர்.சுப்ரமணிய சுவாமி கோவிலில், விஸ்வ ஹிந்த் பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில், தர்மபுரி மாவட்ட தலைவர் நாட்ராயன்சாமி, ஒன்றிய பொதுசெயலாளர் சுரேஷ், ஒன்றிய பொதுசெயலாளர் குட்டன்திருமேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை
உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், நேற்று காலை, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் துவங்கியது. சின்னவாளவாடி ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணர் கோவிலில், காலை, 8:00 மணிக்கு சுதர்சன ேஹாமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது.காலை, 10:00 மணிக்கு, திருமஞ்சனம், திவ்ய அலங்கார ஆராதனைகள் மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. வேணுகான பஜனை குழு, பஜனையோடு, எம்பெருமான் உபய நாச்சிமார்களோடு, திருத்தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து, கோவில் வளாகத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உறியடி உற்சவம் சிறப்பாக நடந்தது.உடுமலை பெரியகடை வீதி நவநீத கிருஷ்ணன் கோவிலில், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தது. தொட்டிலில், குழந்தை நவநீதகிருஷ்ணன் உற்சவ மூர்த்தியானது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டம்
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளில், கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் கொண்டாடினர். வீடுகளில், குழந்தைகளின் கால்களை மாவில் நினைத்து, சின்ன பாதங்கள் வரையப்பட்டன.குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து, கிருஷ்ணன் புகழ் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். சீடை, அப்பம், நாகப்பழம், வெண்ணைய் உள்ளிட்டவை படைக்கப்பட்டன. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரசாதம் வழங்கி கிருஷ்ண ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினர்.
- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X