பொது செய்தி

தமிழ்நாடு

ஒதுக்கீடு அதிகம் இருக்கு; அறிவிப்பு இல்லை: தடுப்பூசி முகாமில் மக்கள் கூட்டமில்லை

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்காததால், தடுப்பூசி அதிகளவு ஒதுக்கீடு செய்தும், மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், பொள்ளாச்சி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க, வார்டு
 ஒதுக்கீடு அதிகம் இருக்கு; அறிவிப்பு இல்லை: தடுப்பூசி முகாமில் மக்கள் கூட்டமில்லை

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்காததால், தடுப்பூசி அதிகளவு ஒதுக்கீடு செய்தும், மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், பொள்ளாச்சி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க, வார்டு வாரியாக தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூன்று வார்டுகளுக்கு சேர்த்து, ஒரு பகுதியில் தடுப்பூசி போடப்படுகிறது.இதுவரை, நகரில் நடந்த முகாம்களில், நகரம் மட்டுமின்றி கிராமத்தில் இருந்து வந்த மக்கள், என, மொத்தம், 52,724 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தடுப்பூசி போடும் தகவல்கள் முன்கூட்டியே தெரியாததால் ஒதுக்கீடு அதிகளவு செய்தும், மக்கள் பயன்படுத்திக்கொள்ள இல்லாத சூழல் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வார்டு, வாரியாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தினமும், 1,500 முதல், இரண்டாயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால், முன்கூட்டியே தகவல் தெரியாததால், மக்களால் குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடிவதில்லை.தடுப்பூசி எங்கே போடப்படுகிறது என, முதல் நாளே அறிவிப்பு வருவதில்லை. காலை, 8:00 மணிக்குள் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தடுப்பூசி எடுக்க நகராட்சி அதிகாரிகள், கோவைக்கு செல்கின்றனர். அதன்பின், தடுப்பூசி வந்ததும் முகாம் துவங்க, காலை, 10:00 மணிக்கு மேலாகிறது.கிராமப்பகுதிகளில், மதியத்துக்கு மேல் முகாம் துவங்கியுள்ளது. கோட்டூரில் சமீபத்தில் மாலையில் தடுப்பூசி முகாம் துவங்கியது. போதிய வசதிகள் ஏற்படுத்தாதால், செவிலியர்கள், 'டார்ச்லைட்' வெளிச்சத்தில் தடுப்பூசி போட்ட அவல நிலை ஏற்பட்டது.இதுபோன்ற பிரச்னைகளை களைய, மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே ஒரு நாளுக்கு முன்னதாக, பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும். கிராமப்புறங்களில், தண்டோரா போட்டும், ஆட்டோக்கள் வாயிலாகவும் முகாம் நடத்தும் தகவல்களை தெரிவிக்க வேண்டும். எந்த பகுதியில், எவ்வளவு 'டோஸ்' தடுப்பூசி போடப்படுகிறது என்ற, விபரங்கள் தெரிய வைத்தால் அனைவரும் பயன்படுத்த முடியும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X