பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு; யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: பள்ளிகள் நாளை (செப்.1) திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னை, திருவல்லிக்கேணியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள்
பள்ளிகள், அமைச்சர், மாணவர்கள், பெற்றோர்கள், மகேஷ், மகேஷ் பொய்யாமொழி

சென்னை: பள்ளிகள் நாளை (செப்.1) திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கும்போது, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல தரப்பினரை கேட்டு முடிவு எடுப்பதை போல், பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் முடிவெடுத்து அறிவுரை வழங்கி உள்ளார். நாளை முதல் 9 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை சிஇஓக்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் போட வேண்டும். அது கிழிந்துவிட்டால், மாற்று மாஸ்க் வழங்க, மற்றொரு மாஸ்க்களை வழங்க வேண்டும். இதற்காக, கூடுதலாக மாஸ்க்குகளை தலைமை ஆசிரியர்கள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளோம். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு கழிவறை முன்பும் சானிடைசர் வைக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் மாஸ்க், சானிடைசர் வைத்திருக்க வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் தான் அமர வைக்கப்பட வேண்டும். 6 நாள் வகுப்புகள் நடக்கும். 5 பாடங்கள் நடத்தப்படும். காலை 9:30 மணிக்கு துவங்கும் வகுப்புகள் மாலை 3:30 மணிக்கு முடித்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. வருப்பறை மேஜைகளில் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் மற்றொரு மாணவரும் அமர வைக்கப்பட வேண்டும்.

ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் இல்லாததால், அந்த அறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனக்கூறியுள்ளோம். பள்ளிகள் திறப்பை கண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களது கடமை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news
பள்ளிகள் திறந்ததும், மாணவர்களிடம் அதிக பாடங்களை கொடுத்து பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஆசிரியர்களிடம் கூறியுள்ளோம். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் விரைவாக முடிக்க ஆலோசனை மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.95 சதவீத ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர் . விரைவில் அனவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பணியாளர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
31-ஆக-202119:47:02 IST Report Abuse
spr சொல்லப்பட்ட ஏற்பாடுகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டால் பாராட்டுக்கள். கொரோனா தொற்று இருந்தாலும் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் வகையில் காலையில் பள்ளிகளில் சித்த மருத்துவ கபசுரக் குடிநீர், இஞ்சி எலுமிச்சை மிளகுக் குடிநீர் இவற்றையும் கூட வழங்கலாம் முகமூடிகளையும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கொரு முறை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு (இதன் அடக்க விலை ரூ 2 அல்லது 3 தான் என்று அறியப்படும் நிலையில்) அரசே நேரடிக் கொள்முதல் செய்தும் வழங்கலாம் தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவலாம் தொண்டையையும் நுரையீரலையும் பாதுகாத்துக் கொண்டால் இந்த நோய் பரவுவதனை குறைக்கலாம் பள்ளிகளில் காலை பிரார்த்தனை வகுப்புக்கள் தொடங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு சொல்லிக் கொடுக்கப்படலாம் ஆசிரியர்கள் பள்ளிப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதை உறுதி செய்து சான்றிதழ்களை பள்ளி வளாகத்தில் பார்வைக்கு வைக்கலாம் போராட்டம்தான் வாழ்க்கை என்பதனை இளைய தலைமுறை உணர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு நல்லதே நடக்கட்டும் அரசின் இந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஆக-202118:52:25 IST Report Abuse
Vena Suna ...அப்புறம் என்ன இருக்கிறது பயப்பட?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஆக-202117:09:07 IST Report Abuse
duruvasar ஒரு சின்ன யோசனை. அமைச்சர் ஐயாவும், சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினரும் ஒன்றாக ஒரு அரைமணி நேரம் ஒரு பள்ளியில் மாணவர்களுடன் வகுப்பறையில் உட்கார்ந்து விட்டு வரலாமே ? மாணவர்களுக்கும் பயம் போனா மாதிரி இருக்கும்., உங்களுடைய ஆசையும் நிறைவேறின மாதிரியும் இருக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X