மார்க்கெட் கடை வியாபாரிகள்: ஊட்டியில் உண்ணாவிரதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கடை வியாபாரிகள்: ஊட்டியில் உண்ணாவிரதம்

Added : ஆக 31, 2021
Share
ஊட்டி:ஊட்டியில், மார்க்கெட் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊட்டி நகராட்சி நிர்வாகம், கடந்த, 25ம் தேதி நகராட்சி மார்க்கெட் கடைகளில், வாடகை நிலுவை வைத்துள்ள,736 கடைகளுக்கு 'சீல்' வைத்தது.'சீல்' வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், இதுவரை, 25.88 லட்சம் ரூபாய் மட்டும் நிலுவை வாடகை செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில்,நேற்று மார்க்கெட் வியாபாரிகள், ஏ.டி.சி.,
 மார்க்கெட் கடை வியாபாரிகள்: ஊட்டியில் உண்ணாவிரதம்

ஊட்டி:ஊட்டியில், மார்க்கெட் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊட்டி நகராட்சி நிர்வாகம், கடந்த, 25ம் தேதி நகராட்சி மார்க்கெட் கடைகளில், வாடகை நிலுவை வைத்துள்ள,736 கடைகளுக்கு 'சீல்' வைத்தது.'சீல்' வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், இதுவரை, 25.88 லட்சம் ரூபாய் மட்டும் நிலுவை வாடகை செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நேற்று மார்க்கெட் வியாபாரிகள், ஏ.டி.சி., பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில்,'நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கடைகளுக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும்,'என, கோரிக்கை வைத்தனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, அ.தி.மு.க.,; அ.ம.மு.க., மற்றும் இ.கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜமுகமது கூறுகையில்,''கடைக்கான வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி வாடகையை குறைக்க வேண்டும். வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால்,கடைகளுக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X